Published:Updated:

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

ஆர்.குமரேசன்
கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை
கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

விளையாட்டுத்துறை வசதி படைத்தவர்களுக்கான துறையாக மாறிவருகிறது. தடகளவீராங்கனை கோமதி போன்று சில வீராங்கனைகள் இதில் விதிவிலக்கு. தேசிய அளவில் வீரர்களாக உருவாக பல்வேறு பயிற்சிகள் தேவைப்படுகின்றன. இதனால், திறமை இருந்தும் செலவுசெய்து பயிற்சி எடுத்துக்கொள்ள முடியாமல் பல வீரர்கள் வேறு துறைகளில் கவனம்செலுத்துகிறார்கள்.

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

இந்நிலையிலும் சில கல்வி நிறுவனங்கள், திறமையான மாணவர்களைச் சிறந்த வீரர்களாக உருவாக்கிவருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளி, திறமையான விளையாட்டு வீரர்களை உருவாகிவருகிறது. கிராமப் பகுதியில் இருந்தாலும், இந்தப் பள்ளியின் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் பல போட்டிகளில் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார்கள். தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், தமிழகத்திற்குத் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.  

தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், கடந்த ஆண்டு பூடானில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில், இந்தப் பள்ளி மாணவர்கள் இந்தியா சார்பில் தங்கம் வென்று சாதனை படைத்தார்கள். இதே பள்ளியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி, மாலத்தீவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் தமிழகம் சார்பில் தங்கம் வென்றார்.

கடந்த 2-ம் தேதி, டெல்லியில் தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான பெண்களுக்கான கூடைப் பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில், தமிழகம் சார்பில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். 17 வயதினருக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், தமிழ்நாடு, டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற பள்ளி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில், அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தமிழக அணி தகுதி பெற்றது. பின்னர் நடந்த இறுதிப்போட்டியில், ஹரியானா அணியுடன் மோதியது. தமிழக அணி (30-34) என்ற புள்ளி கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தங்கம் வென்றது.

கூடைப்பந்தாட்டத்தில் தமிழகத்துக்கு தங்கம்! - வத்தலகுண்டு மாணவிகள் சாதனை

தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், பயிற்சியாளர் வெண்மணிக்கும் அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் சேவியர், முதல்வர் அற்புத சாமி ஆகியோர் மாணவிகளைப் பாராட்டினர். அப்போது பேசிய பள்ளி முதல்வர் அற்புதசாமி, அடுத்தபடியாக அண்டை நாடுகளுக்கு இடையே நடக்க உள்ள போட்டிகளில் தங்கள் பள்ளி வீராங்கனைகள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார். வத்தலகுண்டு, விளையாட்டுக்கு பேர் போன ஊர். இந்திய கபடி அணிக்கான பயிற்சியாளர் பாஸ்கரன், இந்திய கூடைப்பந்தாட்ட வீரர் காசிராஜன் ஆகியோர் வத்தலகுண்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan