Published:Updated:

`அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாகக் கொண்டாட வேண்டும்!' - பா.ஜ.க முன்னாள் எம்.பி கோரிக்கை

அப்துல்கலாம் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி முன்னாள் பா.ஜ.க எம்.பி ஆனந்த் பாஸ்கர் ரபோலு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், `பா.ஜ.க ஆட்சிக்காலத்தில்தான் டாக்டர் அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தார். மாநில அரசுகள் அவரின் நினைவாக முக்கிய சாலைகளை அவரது பெயரால் அழைக்கின்றனர். அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அவரது பிறந்த நாளை ஐ.நா உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. அப்துல் கலாமின் பிறந்த நாளுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜூன் 21-ம் நாளை உலக யோகா தினம் மற்றும் ஆகஸ்ட் 7-ம் தேதியைத் தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது. அதுபோல அக்டோபர் 15-ம் தேதியை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

“கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்கப் பாடுபடுங்கள்” என்ற வாக்கியத்தை இந்திய இளைஞர்களின் மனதில் பதித்துச் சென்றவர் அப்துல் கலாம். இந்திய தேசத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் ஏராளம். இவர் ராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்தார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படுகிறார். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் முடிந்த பின்னர் தனது நாள்களை மாணவர்களுடன் செலவிட்டார். இந்த நிலையில்தான் 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
Vikatan