Published:Updated:

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்
40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

இந்திய வரலாற்றிலேயே 1988-ம் ஆண்டுதான் அதிக வெப்பநிலை இருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. அதாவது சுமார் 33 நாள்கள் வரை தொடர்ந்து அதிக வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது அந்த அளவுக்கு இணையாக மீண்டும் இந்தியாவில் வெப்பநிலை உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடர்ந்தால் முன்னதாக இருந்த பதிவை 2019-ம் ஆண்டு முறியடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

கடந்த சனிக்கிழமை ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாகப் பீகாரின் பாட்னா, உத்தரபிரதேசத்தின் வாரணாசி போன்ற இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தக் கோடைக்காலம் பல மாநிலங்களில் சோக வரலாறு படைத்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வெப்பநிலை ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் நிலவி வருகிறது.

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமல்லாது கடந்த 30 மணி நேரத்தில் அதிக வெப்பம் தாங்காமல் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 16 முதல் 18 வயது உள்ளவர்களே அதிகம். அவுரங்கபாத்தில் 34 பேரும், கயாவில் 25 பேரும், நவாடாவில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இறப்புகள் தொடர்பாக அரசிடமிருந்து எந்த முறையான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வழங்கப்படும் எனப் பீகார் மாநில முதல்வர் நித்தீஷ் குமார் அறிவித்துள்ளார். 

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

இது பற்றி பேசிய பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, ``கடந்த சில தினங்களில் ரத்தத்தில் குளுக்கோஸ் குறைந்த நோயால் பாதிக்கப்பட்டு 85 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடந்து இரண்டு தினங்களில் மட்டும் இதே நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் 62 குழந்தைகளும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 11 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

ஜூன் 14-ம் தேதி முதல் பாட்னாவில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. முன்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை தற்போது உள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக பாட்னாவில்தான் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பீகார் அரசு பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. 

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

`பொதுமக்கள் தங்கள் உடலை எப்போதும் வறட்சியாக வைத்திருக்கக் கூடாது. தொடர்ந்து அதிகமாகத் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். பிற்பகல் நேரங்களில் அதாவது வெயில் அதிகமாக உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி வெளியில் செல்ல நேர்ந்தால் தங்களுடன் தண்ணீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு அடிக்கடி நீரைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்! - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்

வெளிர் நிறத்திலான மற்றும் தளர்வான உடைகளை அணிந்தால் நல்லது. அதிலும் பருத்தி துணியாக இருந்தால் இன்னும் நல்லது. தர்பூசணி, மாம்பழம், எலுமிச்சை, உப்பு - சர்க்கரை கரைசல் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள், உணவிலும் கட்டுபாட்டுடன் இருத்தல் நல்லது. இறைச்சி, உலர்ந்த பழங்கள், காஃபி, டீ, மது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் தங்கள் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளையும் வெயிலில் வைக்காமல் அவற்றையும் பாதுகாக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Vikatan