Published:Updated:

மாநிலங்களவை உறுப்பினராகிறார் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்! #NowAtVikatan

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

16.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Mar 2020 9 PM

மாநிலங்களவை உறுப்பினராகிறார் ரஞ்சன் கோகாய்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 46 -வது தலைமை நீதிபதியாக 2018 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 தேதி ஓய்வு பெற்றார்.

16 Mar 2020 7 PM

கொரோனா தீர்வு சேலஞ்ச்: பரிசுத்தொகை அறிவித்த மத்திய அரசு

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மக்கள் தங்களிடம் இருக்கும் தீர்வுகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தீர்வுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!

16 Mar 2020 6 PM

அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் வரும் மார்ச் 31-ம் தேதி வரையில் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது! மேலும் அனைத்து விளையாட்டு அரங்குகள் கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் முதலியவை மார்ச் 31 -ம் தேதி வரையில் மூடியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

16 Mar 2020 5 PM

மார்ச் 18-ம் தேதி முதல் எஸ் வங்கி செயல்படும்!

வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான `எஸ் பேங்க்' கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்தது. இந்நிலையில் `எஸ் பேங்க்’ முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. எஸ் வங்கியின் வீழ்ச்சியானது கடந்த சில வாரங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொடர்ந்து பங்குச் சந்தையும் அதிகமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ``எஸ் வங்கியில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது. படிப்படியாகச் சிக்கலிலிருந்து எஸ் வங்கியானது மீட்கப்படும். இந்திய வங்கித்துறை வலுவாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. எனவே, மக்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை" என அவர் தெரிவித்துள்ளார்.

16 Mar 2020 2 PM

வண்ணாரப்பேட்டை போராட்டம் ஒத்திவைப்பு!

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக வண்ணாரப்பேட்டையில் நடந்துவந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் நடந்து வந்த போராட்டங்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.

16 Mar 2020 12 PM

பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்!

மாநிலங்களவை உறுப்பினராகிறார் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்! #NowAtVikatan

திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகி பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட துரைமுருகன் முடிவு செய்துள்ளார். இதற்கான விருப்பத்தை தெரிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த மாதம் 29ம் தேதி அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறுகிறது.

இதனுடன் பொருளாளர் தேர்வும் நடைபெறவுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதேநேரம் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு, பொன்முடி, எ.வ வேலு ஆகியோரும் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 Mar 2020 12 PM

சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையில் இன்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையோர மாவட்டங்களில் தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூடவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது. மாவட்டவாரியாகக் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

பரிசோதனை
பரிசோதனை
வி.ஸ்ரீனிவாசுலு
தொடக்கப் பள்ளி விடுமுறை; திரையரங்குகள் மூடல்!- முதல்வர் பழனிசாமி சுட்டிக்காட்டிய 5 விஷயங்கள் #Corona

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், பேரவைக்கு வந்தவர்களுக்கு இன்ஃப்ராரெட் தெர்மாமீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு இன்று முதல் அனுமதியில்லை என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

16 Mar 2020 8 AM

இந்தியாவில் உயர்ந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் தலா ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனை எனப்படும் கிளினிக்கல் டிரையல் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' பூத்! - கேரளாவின் புதிய திட்டம் #Breakthechain
கொரோனா
கொரோனா

சியாட் நகரிலுள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் 45 பேருக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதற்கிடையே, உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,515 ஆக உயர்ந்துள்ளது. 157 நாடுகளுக்குப் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,415ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு