Published:Updated:

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் -உயர்கல்வித்துறை தகவல் #NowAtVikatan

செமஸ்டர்
செமஸ்டர்

16.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Apr 2020 4 PM

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது?

கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி பருவத் தேர்வுகள் நடத்தப்படும் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் தேர்வுகள் நடக்கும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரிகள் விடுமுறையில் இருப்பதால் உயர்கல்வித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

16 Apr 2020 2 PM

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் இன்று தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.

16 Apr 2020 2 PM

உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி - ஸ்டாலின் கோரிக்கை

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் -உயர்கல்வித்துறை தகவல் #NowAtVikatan

தி.மு.க சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி எனத் தி.மு.க-வின் கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 5,000 வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

16 Apr 2020 1 PM

தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்!

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் -உயர்கல்வித்துறை தகவல் #NowAtVikatan

தி.மு.க சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தக் கூட்டம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி எனத் தி.மு.க-வின் கூட்டணிக்கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கொரோனா தடுப்பில் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

16 Apr 2020 11 AM

அனுமதி தேவையில்லை, தகவல் தெரிவித்தால் போதும்!

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை தகவல் தெரிவித்தாலே போதும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தன்னார்வலர்கள் நேரடியாக நிவாரண பொருள்கள் வழங்க தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து தி.மு.க சார்ப்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

16 Apr 2020 10 AM

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல்படி, முதியவர் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை. அது வெளியானால்தான் அவர் கொரோனாவால் பலியானாரா இல்லையா என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரேபிட் டெஸ்ட் கிட்
ரேபிட் டெஸ்ட் கிட்
Representational image
16 Apr 2020 10 AM

சீனாவிலிருந்து இந்தியா வரும் ரேபிட் டெஸ்ட் கிட்!

சீனாவிலிருந்து 6,50,000 ரேபிட் டெஸ்ட் கிட் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை குவாங்சோ விமான நிலையத்திலிருந்து உபகரணங்கள் அடங்கிய விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும் அவை மாலைக்குள் இங்கு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ரேபிட் கிட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

16 Apr 2020 8 AM

12,000-ஐ கடந்த எண்ணிக்கை!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை இந்தியாவில் 12,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,477 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1,489 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 414 பேர் கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த கட்டுரைக்கு