Published:Updated:

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்! தமிழக அரசு #NowAtVikatan

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் ( Representational Image )

16.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Jul 2020 7 PM

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்!

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள்
மாணவர்கள்
Representational Image

இதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதேபோன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngtpc.in மற்றும் www.tngtpc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு

மாணவர்கள் 20.7.2020 முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு 044-22351014, 044-22351015 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 Jul 2020 4 PM

திருக்குறள் குறித்து பிரதமர் மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
AP

பிரதமர் மோடி ட்விட்டரில், ``திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துகள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்’ எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.

16 Jul 2020 2 PM

முதல்வர் நிவாரண நிதிக்கு?

சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை உயர்நீதி மன்றம்

கொரோனா தடுப்புப் பணிக்காக மாநில மக்களிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. இந்நிலையில் அது தொடர்பான வழக்கில், ``எவ்வளவு நிதி வந்தது?'’ என்ற விவரத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 8 வாரங்களில் இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

16 Jul 2020 8 AM

வெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலையே வெளியானது. இந்தத் தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8 சதவிகிதமும் மாணவர்கள் 89.41 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.

மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாகத் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை காலை 9.30 முதல் இணையதங்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு