Published:Updated:

CoronaVirus: தமிழகத்தில் 3.38 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,950 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

Corona
Corona

16.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,109 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,78,270ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 125 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 5,766 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
வயதானவர்களை கொரோனா தொடாமல் இருக்க... 9 டிப்ஸ்!

சென்னையில் மேலும் 1,196 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,196 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,650 ஆக அதிகரித்துள்ளது.

16 Aug 2020 12 PM

2024 தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்!

தோனி ஓய்வுபெற்றது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ``தோனி, கிரிக்கெட்டில் இருந்து மட்டும்தான் ஓய்வுபெற்றிருக்கிறார்; மற்ற எவற்றிலிருந்தும் அல்ல.

 சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி

முரண்பாடுகளுக்கு எதிராகப் போரிடும் அவரது திறன் மற்றும் ஒரு அணியைத் திறம்பட வழிநடத்த முடியும் என கிரிக்கெட்டில் அவர் செயல்படுத்திக் காட்டியது போன்றவை பொதுவாழ்க்கைக்குத் தேவை. அவர் வரும் 2024-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி எடுத்த அந்த 4 முக்கிய முடிவுகள்...  ரிஸ்க்கா, ட்ரிக்கா, ஸ்மார்ட்டா?! #DhoniForever
16 Aug 2020 10 AM

தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திரசிங் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மூலம் அறிவிப்பை வெளியிட்ட தோனி, ``எல்லோருடைய அன்புக்கும் நன்றி. 7.29 மணி முதல் நான் ஓய்வுபெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று அறிவித்திருந்தார். தோனி ஓய்வுபெற்றது குறித்து கிரிக்கெட், சினிமா உலகம் தொடங்கி அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Dhoni
Dhoni
Twitter/ICC

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,``இந்திய அணியை 331 சர்வதேச போட்டிகளில் வழிநடத்தி, 3 சாம்பியன்ஷிப்களை இந்தியாவுக்காக வென்றுகொடுத்த ஒரே கேப்டன் கூல், தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும்’’ என்று பதிவிட்டிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற மகேந்திரசிங் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு