Published:Updated:

Corona: ஒரே நாளில் 5,652 பேருக்குத் தொற்று! - தமிழகத்தில் 5.19 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

protection from covid-19
protection from covid-19

16-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

16 Sep 2020 6 PM

தமிழகத்தில் 5.19 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,19,820-ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 -ஆக அதிகரித்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,559-ஆக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 5,768 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,64,668-ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னையில் மட்டும் இன்று 983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,560 ஆக அதிகரித்தது.

கொரோனா: உடலில் ஆன்டிபாடி உருவானாலும் `மறுதொற்று' ஏற்படலாம்... அலெர்ட்!
16 Sep 2020 2 PM

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். `அண்ணா பல்கலைக்கழகம்’, `அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம்’ என்ற பெயர்களில் பிரிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்திலுள்ள கல்லூரிகளை நிர்வகிக்கும் என்றும், அண்ணா தொழில்நுட்பம் - ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாகச் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

16 Sep 2020 11 AM

வரதட்சணைக் கொடுமை -தண்டனை உயர்வு!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பேரவை விதி 110-ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனை ஏழு ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `இது தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்’ எனவும் அறிவித்தார். மேலும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்துக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழகங்கப்படும் என்றும், பெண்களைப் பின்தொடரும் குற்றத்துக்கு ஐந்து ஆண்டுகளிலிருந்து ஏழு ஆண்டுகளாக தண்டனை உயர்த்தப்பட்டிருக்கிறது எனவும் அறிவித்தார் முதல்வர்!

16 Sep 2020 9 AM

50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,123 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50,20,360-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,290 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள், 82,066-ஆக அதிகரித்திருக்கின்றன.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இதுவரை 39,42,361 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 9,95,933 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

16 Sep 2020 9 AM

அமெரிக்கா: இரண்டு லட்சத்தைக் கடந்த மொத்த உயிரிழப்புகள்!

உலக அளவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. அமெரிக்காவிலும் இந்தியாவிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தற்போது வழங்கப்பட்டிருக்கும் தளர்வுகள் மேலும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகிறது. உலக அளவில், தினசரி ஏற்படும் பாதிப்பில் கடந்த சில நாள்களாகவே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் 91,120 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் 36,447 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா
கொரோனா

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 2,00,197 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 67,88,147-ஆக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு