Published:Updated:

`சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!’ - வானிலை ஆய்வு மையம் #NowAtVikatan

மழை
மழை

16-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Nov 2020 9 AM

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மழை
சென்னை மழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி, தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்தநிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த ஐந்து மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

16 Nov 2020 9 AM

வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு!

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.

அடுத்த கட்டுரைக்கு