Published:Updated:

7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க -  செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்
7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்

7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க - செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குடிநீர் பிரச்னை குறித்து பேட்டி அளித்த தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்து தெறிக்கவிட்ட சம்பவம் நாகர்கோவிலில் அரங்கேறியது.

7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க -  செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளுக்கு 18 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விடுவதாகக் கூறி தி.மு.க எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சியைக் கண்டித்து நடந்த இந்த மறியலில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``குடிநீர் பிரச்னை சம்பந்தமாக தி.மு.க மாவட்டச் செயலாளர் போராட்டம் நடத்தியிருக்கிறார். குடிநீர் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி மாவட்ட வாரியாக கண்காணிப்புக் குழு நியமித்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் மாநகராட்சி ஆணையர்களுக்கு உத்தரவு வழங்கி, தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் லாரி மூலமாகவோ அல்லது ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவோ தண்ணீர் வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். நாகர்கோவில் மாநகராட்சியில் 83,000 வீடுகள் உள்ளன. ஆறு மாதத்தில் அமிருத் திட்டத்தில் புத்தன் அணையிலிருந்து கிருஷ்ணன் கோயில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குடிநீர் இணைப்புக் குழாய் அமைக்கப்பட உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியில் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் மக்கள் உள்ளனர். சில வார்டுகளில் தினந்தோறும் தண்ணீர் வழங்கப்படுகிறது, சில வார்டுகளில் 3 நாள்களுக்கு ஒருமுறையும், சில வார்டுகளில் 7 நாள்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்படுகிறது. குமரியில் பருவமழை தொடங்கியுள்ளது. மேலும், 863 போர்வெல்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. குடிநீர் பஞ்சம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வர்ற இடம் சொல்லுங்க -  செய்தியாளர்களின் கேள்வியால் ஷாக்கான தளவாய் சுந்தரம்


அப்போது செய்தியாளர்கள், ``நாகர்கோவில் மாநகராட்சியில் 7 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும் பகுதியைச் சொல்லுங்கள். போர்வெல்களில் மோட்டார் பழுதாகி உள்ளன. முக்கடல், பேச்சிப்பாறை அணைகளிலிருந்து தண்ணீர் வரவில்லை. ஒருமுறை விட்ட தண்ணீரை 15 நாள்கள் வைத்து குடித்தால் நோய் பரவுகிறது. எனவே, குறைந்த அளவு தண்ணீர் என்றாலும் வாரத்துக்கு ஒருமுறை விடுங்கள்" எனக் கூறினர். இதற்குப் பதில் சொல்ல முடியாத தளவாய் சுந்தரம் ``ஒரு வாரத்தில் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும்" என கூறிவிட்டுச் சென்றார். குடிநீர் பிரச்னை குறித்துப் பேட்டி அளித்த தளவாய் சுந்தரத்தை செய்தியாளர்கள் தெறிக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு