Published:Updated:

திருமணமான இரண்டாம் நாளே மாயமான மனைவி - கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

திருமணமான இரண்டாம் நாளே மாயமான மனைவி - கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
திருமணமான இரண்டாம் நாளே மாயமான மனைவி - கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
திருமணமான இரண்டாம் நாளே மாயமான மனைவி - கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி

ஹரியானவைச் சேர்ந்த சுரேந்தரின் மனைவி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதனால், அவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, தரகர் மூலம் பெண் பார்க்கும் படலத்தைத் தொடங்கியுள்ளனர்.  அப்போது,  ஜிந்த் பகுதியில் ஒரு பெண் இருப்பதாகக் கூறியுள்ளனர். இரு வீட்டாரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் மே மாதத்தில்  நடந்துள்ளது. இதற்காக, தரகருக்கு ரூ.70,000 கொடுத்துள்ளனர். திருமணமான இரண்டாம் நாள், அந்தப்பெண்  தனது உறவினரின் இல்ல விழாவிற்காக லூதியானா செல்வதாகக்  கூறி சென்றுள்ளார். சுரேந்தர், அவரை ரயில் நிலையத்தில் கொண்டுபோய் விட்டுள்ளார். அதன்பின், அந்தப்பெண் செல்போனுடன் மாயமாகிவிட்டார்.

அதையடுத்து, மனைவியைத் தேடி அவரது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண் எனக்கூறித்தான் திருமணம் செய்துள்ளனர்.  ஆனால் அவர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது.  சுரேந்தரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும் தரகரும் மிரட்டியுள்ளனர். காவல்துறையிடம் சென்றால் தவறாகப் புகார் அளித்து சிறையில் தள்ளிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அவர் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார்.  

இந்தச் சம்பவம்  தொடர்பாக தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய  சுரேந்தரின் தந்தை, “ஒரு பெரிய கும்பலே இதற்குப் பின்னால் இயங்கிவருகிறது. அவர்களின் வேலையே அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதுதான். தரகராகச் செயல்பட்டவர், ஜோஹிந்தர் எனத் தெரியவந்துள்ளது.  விரைவிலே அவர் கைதுசெய்யப்படுவார். எங்களது பணம் திரும்பி வரும் என்றார். 

Vikatan