Election bannerElection banner
Published:Updated:

குப்பைகொட்டும் வழியாக எஸ்கேப்! -திருவனந்தபுரம் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதிகள்

கேரள பெண்கள் சிறையிலிருந்து இரண்டு பெண் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில் பெண் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றது இதுவே முதல்முறை என்கிறார்கள்.

குப்பைகொட்டும் வழியாக எஸ்கேப்! -திருவனந்தபுரம் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதிகள்

கேரளத்தில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் வர்க்கலையைச் சேர்ந்த சந்தியா, பாங்கோடு பகுதியைச் சேர்ந்த ஷில்பா. இவர்கள் திருவனந்தபுரத்தை அடுத்த அட்டக்குளங்கர பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகளை வேலைக்காக காலையில் செல்லில் இருந்து வெளியே விட்டுள்ளனர். மாலையில் மீண்டும் செல்லில் அடைக்கும்போது இந்த இரண்டு பெண்களும் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அவர்கள் சிறையில் குப்பைகளை வெளியே கொட்டும் பகுதி வழியாக தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

குப்பைகொட்டும் வழியாக எஸ்கேப்! -திருவனந்தபுரம் சிறையிலிருந்து தப்பிய பெண் கைதிகள்

ஜெயில் வார்டன்களின் கவனக்குறைவால் இந்தப் பெண் கைதிகள் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. மேலும், பிற கைதிகளும் இவர்கள் தப்பிச் செல்ல உதவி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தைவிட்டே அந்தப் பெண் கைதிகள் தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் பெண் கைதிகள் சிறையிலிருந்து தப்பிச்செல்வது இதுதான் முதன்முறை என்கிறது போலீஸ் வட்டாரம். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தப்பிச் சென்ற பெண் கைதிகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு கண்டுபிடிக்கும் படலத்தில் தனிப்படை போலீஸார் இறங்கியுள்ளனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு