Published:Updated:

ரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்! யார் இந்த கோயல், அரவிந்த் குமார்?

ரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்! யார் இந்த கோயல், அரவிந்த் குமார்?
ரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்! யார் இந்த கோயல், அரவிந்த் குமார்?
ரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்! யார் இந்த கோயல், அரவிந்த் குமார்?

உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது,  உளவுத்துறை இயக்குநராக  ராஜீவ் ஜெயினும், ‘ரா’உளவு அமைப்பின் தலைவராக  அனிஸ் தாஸ்மானாவும் உள்ளனர். இவர்கள் இருவரும் 2016 டிசம்பரில் நியமிக்கப்பட்டனர்.  இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு டிசம்பரிலே முடிவுக்கு வந்தது.  நாடாளுமன்றத் தேர்தல் வந்ததால் இவர்களின் பணிக்காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.  இவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது.  இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய இயக்குநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். உளவுத்துறை இயக்குநராக அரவிந்த் குமாரையும்,  ‘ரா’ உளவு அமைப்பின் தலைவராக சமந்த் கோயாலையும் நியமனம் செய்துள்ளார்.  இவர்கள் இருவரும் 1984-ம் ஆண்டு பேட்சை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள்.

அரவிந்த் குமார், அசாமில் காவல்துறை அதிகாரியாகத் தனது பணியைத் தொடங்கினார். பின்னர், அங்கிருந்து உளவுத்துறைக்கு மாற்றப்பட்டார். நக்சல் மற்றும் காஷ்மீர் விவகாரங்களைக் கையாளுவதில் அரவிந்த் குமார் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியைத் திறம்பட செய்துவந்துள்ளார்.

சமந்த் கோயல், 1990-களில் பஞ்சாப்பில் தலைவிரித்தாடிய பயங்கரவாதச் செயல்களை ஒடுங்கியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. 2011-ல் ‘ரா’அமைப்பில் ஒரு பணிக்காக டெல்லி வந்தவர் அங்கேயே இருந்துவிட்டார்.  அதன்பின்னர் பஞ்சாப் செல்லவில்லை. 2019 பிப்ரவரியில், பாலகோட் விமானப்படை தாக்குதல் மற்றும் 2016-ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிலும் கோயல் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan