Published:Updated:

`மக்கள் நீரின் அவசியத்தை உணர வேண்டும்!’ - திருமணத்தில் தம்பதிக்கு தண்ணீர் பரிசு

`மக்கள் நீரின் அவசியத்தை உணர வேண்டும்!’ - திருமணத்தில் தம்பதிக்கு தண்ணீர் பரிசு
News

இன்று தமிழகத்திலேயே பரிதவிக்க வைக்கும் தலையாய பிரச்னையாக இருப்பது தண்ணீர்ப் பஞ்சம்தான். வரலாறு காணாத வறட்சியும்  இன்றைக்குத் தண்ணீருக்காக தமிழகமே கையேந்தி நிற்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஆண்டுக்காண்டு அதிகரித்து, இந்த ஆண்டு குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாமல் பல மாவட்டங்களும் மாநகரங்களும் தவித்துக்கொண்டிருக்கின்றன. தண்ணீர்த் தட்டுப்பாட்டை தடுக்கவும் மழை நீரை சேகரிக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

`மக்கள் நீரின் அவசியத்தை உணர வேண்டும்!’ - திருமணத்தில் தம்பதிக்கு தண்ணீர் பரிசு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமூக ஆர்வலர்களும் இதற்கான விழிப்புணர்வுகளை ஆங்காங்கே மக்களிடையே ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கும் நிலையில்,  திருவாரூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமணத் தம்பதிக்கு அளிக்கப்பட்ட பரிசைப் பார்த்து அங்கிருந்த மக்கள் அனைவரும் வியந்தனர் .திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற திருமண விழாவில் மேகநாதன் மற்றும் டெய்சி என்ற தம்பதிக்கு  நடைபெற்ற திருமண விழாவில் அவர்களின் நண்பர்கள் திருமணப் பரிசாக அவர்களுக்கு 25 லிட்டர் கேன் தண்ணீரை பரிசாக வழங்கினர்.

`மக்கள் நீரின் அவசியத்தை உணர வேண்டும்!’ - திருமணத்தில் தம்பதிக்கு தண்ணீர் பரிசு

இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் வியந்தனர் அவர்கள் கூறியதாவது,  ``தண்ணீர்த் தட்டுப்பாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்கவும், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற பரிசுப் பொருள்களை வழங்குகிறோம்” என்றும் கூறினர்.

``பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், மக்கள் அந்த நீரை வீணடிக்காமல், அது கடலில் சென்று கலப்பதைப் தடுக்கவும், அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும் மக்களும் ஒத்துழைத்து மழைநீர் சேகரிப்பு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை என்று உணர்ந்து மழைநீரை சேகரிக்க வேண்டும். இதைவிட்டால் அடுத்த ஆண்டு நாம் இதைவிட பெரும் பஞ்சத்தைக் காண நேரிடும். தண்ணீரை கொடுக்கும்பொழுது எங்களுக்கும் வருத்தமாகவும் இருந்தது. இருந்தாலும் விழிப்புணர்வுக்காக செய்தோம்” என்றனர்.