Published:Updated:

டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்

டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்
டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்

டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்

பத்திரப்பதிவுத்துறையில் வருவாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையான 11,513 ரூபாய் கோடியில் 11,002 கோடி ரூபாயை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை குன்றத்தூர் சார்பதிவாளர் நிர்ணயித்த இலக்கை விட கூடுதல் தொகையை வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்.

டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்

தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறையில் 9 பதிவு மண்டலங்களும், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும், 572 சார்பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன. இதன் தலைவராக ஐஏஎஸ் அந்தஸ்தில் பதிவுத் துறைத் தலைவரும், அவருக்கும் மேல் வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளரும் உள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் பதிவுத் துறைக்கென்று  வருவாய் இலக்கை அரசு நிர்ணயித்துவருகிறது. அந்த வகையில் கடந்த 2018-19ம் ஆண்டுக்கு பதிவுத் துறைக்கு வருவாய் இலக்காக ரூ.11,513 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இவை ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆவணப் பதிவுகளின் அடிப்படையில் பிரித்தளிக்கப்பட்டன.

இந்த இலக்கை முழுமையாக அடைந்திட துறைச் செயலாளரும் பதிவுத் துறைத் தலைவரும் அவ்வப்போது உரிய வழிகாட்டுதலையும், அறிவுரைகளையும் வழங்கியதுடன் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர். துணைப் பதிவுத்துறைத் தலைவர்களையும், மாவட்டப் பதிவாளர்களையும் மாதாந்திரக் கூட்டத்தின் மூலம் முழுப் முயற்சி எடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டித் தரவேண்டும் என்று வலியுறுத்தினர். மாவட்டப் பதிவாளர்களும் சார்பதிவாளர்களுக்கு ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் வழங்கினர். தமிழகம் முழுவதும் கடந்த நிதியாண்டில் 11,002 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பதிவுத்துறை. 

மாநிலத்திலேயே அதிகமாக சென்னை மண்டலத்திற்கு ரூ.5,099 கோடி வருவாய் இலக்காக கடந்த நிதியாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.4,814.89 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இம்மண்டலத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 5 மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களும், அவற்றின் கீழ் 63 சார்பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 15 சார்பதிவாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைக் கடந்த வருடம் எட்டியுள்ளனர். அதிலும் தென்சென்னை பதிவு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.233 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தது. மேலும் இந்த அலுவலகத்தில்  20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் கடந்த நிதியாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

டார்க்கெட் ரூ.11,513 கோடி; வசூல் ரூ.11,002 கோடி! - முதலிடத்தை பிடித்த குன்றத்தூர் சார்பதிவாளர்

சமீபத்தில் பதிவுத்துறைத் தலைவர் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இலக்கினை அடைந்த சுமார் 200க்கும் மேற்பட்ட சார்பதிவாளர்களின் பணிகளைப் பாராட்டி துறைச் செயலர் கையொப்பமிட்ட சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன. அந்தச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கும் விழா சென்னை மண்டலத்தைப் பொறுத்தவரை சென்னை துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

சென்னை மண்டலத் துணைப் பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனன் 15 சார்பதிவாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழையும், நினைவு பரிசுகளையும் வழங்கி பாராட்டினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி அதிக  வருவாய் அடைந்து முதலிடம் பிடித்த குன்றத்தூர் சார் பதிவாளர் சு.பாலுவை துணைப் பதிவுத்துறைத் தலைவர் பாராட்டினார். பதிவுத்துறை முழுதும் கணிப்பொறி மயமாக்கப்பட்ட நிலையிலும், மிகுந்த வேலைப்பளுவுடன் பணியாற்றிவரும் சார்பதிவாளர்களுக்கு துறைச் செயலாளரின் இத்தகைய பரிசளிப்பும் பாராட்டும் மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. 

எந்தெந்த மண்டலங்களுக்கு எவ்வளவு?

மண்டலம்          இலக்கு (கோடியில்)   வசூல் (கோடியில்)  
 சென்னை            ரூ.5,099                        ரூ.4814 
வேலூர்                   ரூ.473                          ரூ.462.45
சேலம்                    ரூ.862                           ரூ.870.23
கோவை                ரூ.1,945                        ரூ.1,872.50
தஞ்சாவூர்             ரூ.368                           ரூ.351.70
திருச்சி                  ரூ.610                           ரூ.588.26
மதுரை                  ரூ.1,041                        ரூ.1,008.41
திருநெல்வேலி    ரூ.731                           ரூ.667.96
கடலூர்                  ரூ.384                           ரூ.366.42


 

அடுத்த கட்டுரைக்கு