Published:Updated:

`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்

சிந்து ஆர்
`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்
`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்குச் செல்வதாக கூறி கடந்த மார்ச் மாதம் புறப்பட்டு வந்துள்ளார். அவர் எங்கு சென்றார் எனத் தெரியாததால் கேரள போலீஸார் தேடிவருகின்றனர்.

`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்


ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பெண் லிஸ வெய்ஸ் (31). இவர் கேரள மாநிலம் கொல்லம் அமிர்தபுரியில் உள்ள அமிர்தானந்தமயி ஆசிரமத்ர்குக்கு வருவதாகக் கூறி கடந்த மார்ச் 5-ம் தேதி ஜெர்மனிலிருந்து புறப்பட்டுள்ளார். அதன் பிறகு, லிஸ வெய்ஸியைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அவரின் தாய் ஜெர்மன் தூதரகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். ஜெர்மனிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்ற மகள் பின்னர் போனில் பேசவில்லை, அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும் லிஸ வெய்ஸின் தாய் புகாரில் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கேரள போலீஸார் விசாரணை நடத்தியதில் மார்ச் 7-ம் தேதி அந்தப் பெண் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்திறங்கியது தெரியவந்துள்ளது. அவருடன் இங்கிலாந்தைச் சேர்ந்த முகம்மது அலி என்பவர் வந்ததாகவும். அவர் மார்ச் 15-ம் தேதி திரும்பிச் சென்றுவிட்டதாகவும் சங்குமுகம் காவல்துறை துணை ஆணையர் இளங்கோ தெரிவித்துள்ளார். 

`போனிலும் பேசவில்லை; எந்தத் தகவலும் இல்லை!' - கேரளாவுக்கு வந்த மகளைத் தேடும் ஜெர்மன் தாய்

ஜெர்மன் பெண், கொல்லம் அமிர்தபுரி மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்துக்குச் செல்வதாகக் கூறியதால் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பெண் ஆசிரமத்துக்கு வரவில்லை என்றும் ஆசிரமத்துக்கு வரும் அனைவரின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆசிரம தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜெர்மன் பெண்ணின் குடும்பத்தினரிடம் லிஸ வெய்ஸுக்கு நெருக்கமானவர்கள் குறித்து கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் கோவளத்தில் காணாமல்போன லத்தீன் பெண் ஏப்ரல் மாதம் கண்டல் காட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த வழக்கில் போலீஸ் மெத்தனமாக இருந்ததால் லத்தீன் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவேதான் ஜெர்மன் நாட்டுப் பெண் விவகாரத்தில் கேரள போலீஸ் துறை துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. 

Vikatan