Published:Updated:

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback
அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback
அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> ``அ.தி.மு.க ஆட்சி மத்திய பி.ஜே.பி-யின் அடிமை ஆட்சியாகவே இருக்கிறது" என்று எதிர்க்கட்சிகள் விமர்ச்சித்துவரும் நிலையில், பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த பல அதிரடி திட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா என்று கேள்விகளையும் கவனஈர்ப்புத் தீர்மானங்களையும் கொண்டுவந்து, மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் அ.தி.மு.க-வை வைத்து ஆட்டம்காட்ட ஆரம்பித்துள்ளது, தி.மு.க. ஒரே நாளில் மத்திய அரசின் மூன்று அதிரடித் திட்டங்களுக்கு ஆளும்கட்சியை வைத்து மத்திய அரசுக்கு எதிராகக் கொம்பு சீவ வைத்துள்ளது, தி.மு.க. > "மோடியிடம் பணிகிறாரா எடப்பாடி?"- சட்டசபையில் அ.தி.மு.க-வுக்கு கொம்பு சீவிய தி.மு.க! > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> தமிழகம் முழுவதும் கடந்த ஜூன் 28-ம் தேதி, கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. நியூட்ரினோ திட்டம் அமையவிருக்கும் பொட்டிபுரம் கிராமத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமசபைக் கூட்டத்தில் ஊர் மக்கள் சார்பாக மனு கொடுத்தனர். இந்த நிலையில், நியூட்ரினோவுக்கு ஆதரவாகவும் சில குரல்கள் இணையதளத்தில் எழ ஆரம்பித்தன. அவற்றில் பெரும்பாலானவற்றை `தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனால், மற்ற மாநிலங்களுக்குப் போகப்போகின்றன. இவை மாநிலத்துக்குப் பெருமை சேர்க்கும் திட்டம்' என்பதாகவே இருந்தன. உண்மையாகவே மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளதா? என்ன நிலையில் அந்தத் திட்டம் இருக்கிறது? > தமிழக அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறதா? - நியூட்ரினோ திட்டத்தின் இன்றைய நிலை > முழுமையான சிறப்பு செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க 

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> ``ஆகாஷின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மட்டுமல்லாது, அவரது நடவடிக்கைகளை ஆதரிப்பவர்களையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்" என்று கண்டிப்புடன் பேசியிருக்கிறார் மோடி. மேலும், ``அந்தச் சம்பவத்தின் பின்னணியில் யாருடைய மகன் இருக்கிறார் என்பதைப் பற்றி கவலையில்லை. ஆனால், அதுபோன்ற நடவடிக்கைகள் முற்றிலும் தேவையற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அதேபோல் ஆகாஷ் விஜயவர்க்கி சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அவருக்கு வரவேற்பு அளித்தவர்களையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்" என மோடி பேசியிருக்கிறார். > `யார் மகனாக இருந்தாலும் கவலையில்லை!' - எம்.பி-க்கள் கூட்டத்தில் கொதித்த மோடி > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> இந்தப் பயணம் தொடங்கிய 21-வது நாள், க்ரீன்லாந்தை அடைந்திருக்கிறது. 1,512 கிலோமீட்டர் பனியில் நடந்த பயணம் இது. அங்கு சுற்றித்திரிந்த நரி, அத்துடன் நிற்கவில்லை. ஓயாமல் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இறுதியாக 76 நாள்களுக்குப்பின் கனடாவின் எல்லெஸ்மியர் தீவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது... - ஓர் ஒற்றை ஆர்க்டிக் நரி, உறைந்த கடலில் வெறும் 76 நாள்களில் 3,506 கிலோமீட்டர் (2,176 மைல்) தூரம் பயணம்செய்து ஆராய்ச்சியாளர்களை மிரளவைத்திருக்கிறது. அந்த நரி, எப்படி அவ்வளவு தூரம் சென்றது? எதற்காக இந்த நீண்ட பயணம்? > `சான்ஸே இல்ல' - ஒற்றை நரியின் 3,506 கி.மீ பயணம்... வியந்த விஞ்ஞானிகள்! > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க 

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> `` `எழுவர் விடுதலை எங்கள் அரசின் கொள்கை முடிவு' என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே, மறுபுறம் அதற்கான எந்த சட்ட, அரசியல் நடவடிக்கையையும் மேற்கொள்ளாத அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கிறது. அரசியல் சட்டம் வழங்கும் மாநில உரிமையை, தனது ஆட்சியை நீடிக்க விட்டுக் கொடுத்துவிட்டதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. மாநில அரசின் முழு அதிகாரத்தின் கீழ் உள்ள எழுவர் விடுதலை உரிமையை நிலைநாட்ட முடியாத தமிழக அரசு, அரசியல் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வி தொடர்புடைய நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதா, காவிரி உரிமை, ஹைட்ரோ கார்பன் சிக்கல், ஸ்டெர்லைட் போன்றவற்றில் எந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது." > `அரசியல் சட்டத்துக்கு முரணான ஆளுநரின் அரசியல்!' - 5 தீர்ப்புகளை அறிவாரா எடப்பாடி பழனிசாமி? > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> பாண்டியாவின் ஆட்டத்திலும், நோக்கத்திலும் குறை சொல்ல முடியாது. அவர் ஒரு பின்ச் ஹிட்டர். அப்படித்தான் நின்றிருப்பார். அப்படித்தான் ஆடுவார். ஆனால், ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனாக தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் எனில், சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். > 'அடங்காத காளை' பாண்டியா செய்ய வேண்டிய சின்ன அட்ஜஸ்ட்மென்ட்! > முழுமையான கிரிக்கெட் விமர்சனக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

இதழிலிருந்து > `ஓரே நாடு... ஒரே தேர்தல்' என்னும் திட்டத்துக்கு ஆதரவாக அரசுத் தரப்பிலிருந்து மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, செலவு குறையும் என்பது. இரண்டாவது, அடிக்கடி தேர்தல்கள் வருவதைத் தவிர்ப்பதன் மூலம் ஆளும் கட்சிகள், மக்கள் நலன், நிர்வாகம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பது. மூன்றாவது, ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் தேர்தல் வரும் என்பதால், மக்கள் கூடுதல் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களிப்பார்கள் என்பது. கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது  -  உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத வரையில்! > ஒரே நாடு... ஒரே தேர்தல்! - ஏன்? எதற்கு? எப்படி? - சுப.வீரபாண்டியன் > முழுமையான சிறப்புக் கட்டுரைக்கு க்ளிக் செய்க

அய்யோடா... அப்போ எப்படி இருந்திருக்காரு எடப்பாடி பழனிசாமி..?! #VikatanFlashback

> அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர். அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி... - ஆம், இது விகடன் ஃப்ளாஷ்பேக். முதல்வர் ஆக எடப்பாடி கே.பழனிசாமியின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியும். அவர் அமைச்சராக இருந்தபோது என்னென்ன சாதித்தார்? > 2015-ல் வெளியான 'மந்திரி தந்திரி' பகுதி > முழுமையான அலசல் கட்டுரைக்கு க்ளிக் செய்க

> யூடியூப் டாப்:

தென்னிந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் `தர்பார்', ராஜமௌலியின் `RRR', சிரஞ்சீவியின் `சைரா', பிரபாஸின் `சாஹோ' ஆகிய படங்களின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இப்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் எடிட்டர். அவர் உடனான சிறப்பு வீடியோ பேட்டி > ``கமர்ஷியல் படம், கலைப்படம்... கத்துக்க ரெண்டும் அவசியம்!" 

> ஃபேஸ்புக் ஹிட்:

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீடியோ: க.சதிஷ்குமார்