Published:Updated:

ஒரே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 3 அடி உயர்வு

விகடன் விமர்சனக்குழு
ஒரே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 3 அடி உயர்வு
ஒரே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 3 அடி உயர்வு
ஒரே நாளில் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 3 அடி உயர்வு

கர்நாடகா மாநிலம், கபினி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் மட்டும் 3 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி விட்டன. இதனால், அணையின் பாதுகாப்பை கருதி கபினி அணைக்கு வரும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் 9 ஆயிரத்து 500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

##~~##
நேற்றைய நிலவரப்படி 16 புள்ளி 9 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம், இன்று 19 புள்ளி 6 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.