Published:Updated:

Corona Live Updates: அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு கொரோனா தொற்று!

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

16.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Jul 2020 8 PM

அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு கொரோனா தொற்று!

நிலோஃபர் கபில்
நிலோஃபர் கபில்

தமிழகத் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது மகன் மற்றும் மருமகன் ஆகியோருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. சொந்த ஊரான வாணியம்பாடியில் இருந்து சென்னையில் உள்ள அவரது குடியிருப்புக்கு அமைச்சர் 3 நாள்களுக்கு முன்னர் வந்திருக்கிறார். இந்தநிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டார்.

- லோகேஸ்வரன்.கோ

16 Jul 2020 8 PM

கவிஞர் வரவர ராவுக்கு கொரோனா தொற்று!

தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ் ஒரு புகழ்பெற்ற கவிஞரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். எல்கர் பரிஷத் வழக்கில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், தற்போது மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரவர ராவ்
வரவர ராவ்

மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக மனித உரிமை அமைப்புகள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தன. இதையடுத்து, அவர் மும்பையில் உள்ள மற்றொரு மருத்துவமனையான செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஜே.ஜே மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

`வரவர ராவ் குழந்தை மாதிரி பேசுகிறார்!' - குடும்பத்தினர் கண்ணீர்
16 Jul 2020 6 PM

தமிழகத்தில் 1.5 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,56,369-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 69 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,236 -ஆக அதிகரித்துள்ளது.

corona spread
corona spread

சென்னையில் மேலும் 1,157 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,157 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.

16 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,68,876 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 32,695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா 360
கொரோனா 360

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,915 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,815 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,31,146 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு