Published:Updated:

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

நிர்பயா குற்றவாளிகள்
நிர்பயா குற்றவாளிகள்

17.2.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

17 Feb 2020 4 PM

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!'

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே 2 முறை உத்தரவு பிறப்பித்து கருணை மனு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

``கருணை என்ற ஒற்றை வார்த்தை காப்பாற்றுகிறது!'' நிர்பயா வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர் கருத்து
17 Feb 2020 3 PM

முதலமைச்சரே பதில் சொல்ல வேண்டும்!

வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக நடந்துவரும் போராட்டம் நான்காவது நாளை எட்டியிருக்கிறது. இந்தநிலையில், அந்த போராட்டத்தை அரசு முறையாகக் கையாளவில்லை என்று அ.ம.மு.க பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டி.டி.வி.தினகரன் விமர்சித்திருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பதிவு
டி.டி.வி.தினகரன் ட்விட்டர் பதிவு

இதுதொடர்பாக அவர், ``சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் போராட்டத்தை அரசு முறையாகக் கையாளவில்லை என்பதே உண்மை. வழக்கம்போல் பழனிசாமி பொய் சொல்கிறார். சட்ட அமைச்சரே, தம் வீட்டிற்குச் செல்லவே அச்சமாக இருக்கிறது எனவும் அந்த அளவுக்கு சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருப்பதற்கு, `தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது' என்று தெரிவித்துவரும் முதலமைச்சரே பதில் சொல்ல வேண்டும்'' என்று டி.டி.வி.தினகரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

17 Feb 2020 12 PM

தூண்டிவிடப்பட்ட போராட்டம்!

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நடப்பு கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் பதிலளித்தார். எனினும் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக விவாதிக்கலாம் என்றார். இந்த விவாதத்தின்போது முதல்வர், `வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும் சில சக்திகளாலும், விஷமிகளாலும் தூண்டிவிடப்பட்ட போராட்டம் இது' என்று பதிலளித்துள்ளார். மேலும், அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்றபோது அவர்கள் காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தினர் என்றார். முதல்வரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தி.மு.க-வினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், `விவாதம் நடத்தாமலே, சபாநாயர் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்கிறார்' என சபாநாயகரை குற்றஞ்சாட்டினார்.

17 Feb 2020 11 AM

ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரிப்பும்!

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், `வண்ணாரப்பேட்டையில் காவல்துறை தடியடி நடத்தியதால் வன்முறை களமாக மாறிவிட்டது. வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டியது யார்? குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்" என்றார். இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர், ``குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை" என ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தார்.

17 Feb 2020 11 AM

மூன்றாண்டுகள் நிறைவு!

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

தமிழக பட்ஜெட்டுக்குப் பின்னர் இன்று மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடியது. முன்னதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மூன்றாண்டுகளைப் பூர்த்தி செய்ததையடுத்து, அரசின் தரப்பிலிருந்து சாதனை மலர் மற்றும் குறுந்தகடு வெளியிடும் நிகழ்வு நடந்தது. இதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். சட்டப்பேரவையில் முதல்வருக்கு வாழ்த்து சொல்லப்பட்டது.

`நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ல் தூக்கு!' - டெல்லி நீதிமன்றம் உத்தரவு #NowAtVikatan

சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அதில், ``சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை கண்டிக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

17 Feb 2020 9 AM

தீர்மானம் நிறைவேற்றும்வரை போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாக இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு