Published:Updated:

‘தி.நகரில் கடைகள் மூட உத்தரவு!’ - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் #Corona #NowAtVikatan

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

17-3-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

17 Mar 2020 8 AM

உலக அளவில் 24 மணிநேரத்தில் 14,000 புதிய பாதிப்புகள்!

உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,000 என்கின்றன புள்ளி விவரங்கள். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 7,000-த்தைத் தாண்டியிருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7,071. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 179,814.

கொரோனா
கொரோனா
அச்சுறுத்தும் கொரோனா... அரசு, நிறுவனங்கள், பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?#LetsFightCovid-19

அதேநேரம், கர்நாடகாவில் வைரஸ் தொற்றால் மேலும் இருவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில், வரும் 31-ம் தேதி வரை தி.மு.க-வின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்காக 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்குழுக் கூட்டத்தையும் தி.மு.க ஒத்திவைத்திருக்கிறது. பொதுக்குழு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

17 Mar 2020 11 AM

மும்பையைச் சேர்ந்தவர் பலி!

கொரோனா பாதிப்பு காரணமாக மும்பையில் 64 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் ஏற்கனவே கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மும்பையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கஸ்தூர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியது.

17 Mar 2020 6 PM

தி.நகரில் கடைகள் மூட உத்தரவு!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல். அவசிய தேவையை தவிர்த்து மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல், சென்னையில் உள்ள 3,800 ஏ.டி.எம்-களை அவ்வப்போது தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பூங்காங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு