Published:Updated:

தமிழகத்தில் 11,000-த்தைத் தாண்டிய பாதிப்பு;சென்னையில் மட்டும் 6,000 கொரோனா பாசிட்டிவ்! சுகாதாரத்துறை தகவல் #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

17.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

17 May 2020 11 AM

இந்தியாவில் 90 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,109 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,872 பேர் இந்தக் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 30,706 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,088ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135ஆக அதிகரித்துள்ளது.

17 May 2020 11 AM

ரூ.163 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை ஆகியுள்ளது.

17 May 2020 2 PM

மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு!

மகாராஷ்டிராவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவில்ல நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

17 May 2020 3 PM

தமிழகத்தில் மே 31 வரை லாக் டௌன் நீட்டிப்பு..!

தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.

17 May 2020 6 PM

நாடு முழுவதும் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மத்திய அரசின் மூன்றாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்து. ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவடைய இருந்த நிலையில் அதனை தற்போது மத்திய அரசு நீட்டித்துள்ளது. நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 May 2020 6 PM

தமிழகத்தில் 11 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 639 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் நோயத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கு 11,224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 482 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6278ல் இருந்து 6750ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த்தொற்றால் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு