Published:Updated:

முதல்முறையாக 2,000-த்தைக் கடந்த பாதிப்பு! தமிழகத்தில் 50,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை #Corona #NowAtVikatan

கொரோனா
கொரோனா

17.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

17 Jun 2020 6 PM

முதல்முறையாக 2,000-த்தைக் கடந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,276 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,556 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

17 Jun 2020 6 PM

நீட் தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவெடுக்கவில்லை!

நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற நீட்தேர்வை ஒத்திவைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் தேர்வர்கள் இது போன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா அழுத்தம், பயிற்சியில்லை... நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மாணவர்கள்? #KnowNeetNoNeet
17 Jun 2020 4 PM

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு!

லடாக் எல்லைப் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாகவும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னையைச் சுமுகமாக முடிக்க இரு நாடுகளும் விரும்புவதாகவும் எல்லையில் மோதலுக்குக் காரணமாக இருந்த விஷயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 Jun 2020 1 PM

எல்லை விவகாரம் - அனைத்துக்கட்சி கூட்டம்!

இந்திய, சீன எல்லை விவகாரம் பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. 19 -ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Jun 2020 12 PM

முப்படையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு! 

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதைத் தொடர்ந்து, இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பாதுகாப்பை அதிகரிக்க ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார்.

17 Jun 2020 11 AM

முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழந்தார்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், முதலமைச்சர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

17 Jun 2020 9 AM

ஒரே நாளில் 2,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 -லிருந்து 3,54,065 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,974 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 2003 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900-லிருந்து 11,903 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 1,406 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு