Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு! #NowAtVikatan

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

17.8.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Aug 2020 7 PM

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஆகஸ்ட் 18) தீர்ப்பளிக்கிறது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி போராட்டம் நடத்தினர். அதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்து, ஆலைக்கு 2018-ம் ஆண்டு, மே 28-ம் தேதி சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்குச் சென்றது. இது குறித்து ஆய்வு செய்ய தீர்ப்பாயம் தரப்பில் நிபுணர்குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்குழு, `ஆலையைத் திறக்கலாம்’ என அறிக்கை அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஆலையைத் திறப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று தெரிவித்தது.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

Vikatan
17 Aug 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,667 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 2,83,937 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாநோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்திருக்கும் நிலையில், மொத்த எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு! #NowAtVikatan

சென்னையில் மேலும் 1,185 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,185 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாநோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,839 ஆக அதிகரித்துள்ளது.

17 Aug 2020 6 PM

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நாளை தீர்ப்பு! #NowAtVikatan

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும், உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

17 Aug 2020 5 PM

எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை!

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்.பி வசந்தகுமாருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்படுவதாக, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

17 Aug 2020 12 PM

விரைவில் குணமடைய பிரார்த்தனை!

ரஜினி
ரஜினி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக வீடியோ வெளியிட்டுள்ளார். `50 ஆண்டுகளுக்கு மேல், பல மொழிகளில் பாடி மக்களை மகிழ்வித்தவர் எஸ்.பி.பி’ என அவருக்குப் புகழாரமும் சூட்டியுள்ளார்.

17 Aug 2020 12 PM

நீட், ஜே.இ.இ தேர்வுகளைத் தள்ளிவைக்க முடியாது!

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நீட், ஜே.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த நிலையில் இன்று `நீட், ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்யவோ, ஒத்திவைக்கவோ முடியாது’ என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

`உரிய முன்னெச்சரிக்கையுடன் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்’ என்கிற தேசிய தேர்வு முகமை அளித்த உறுதியின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், `தேர்வைத் தள்ளி வைப்பதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’ எனவும் நீதிமன்றம் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறது.

17 Aug 2020 9 AM

26 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்திருக்கிறது. மொத்த பாதிப்பு 26,47,664 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 941 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,921 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,19,843 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு