Published:Updated:

`ஒரே நாளில் 97,894 பேருக்குத் தொற்று; சிகிச்சையில் 10,09,976 பேர்!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

கோவிட்-19 கொரோனா வைரஸ்
கோவிட்-19 கொரோனா வைரஸ்

17-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

17 Sep 2020 9 AM

51 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 51,18,254-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,132 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்புகள் 83,198-ஆக அதிகரித்திருக்கின்றன.

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

இந்தியாவில் இதுவரை 40,25,080 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள். 10,09,976 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு