Published:Updated:

`செம்பரம்பாக்கம் ஏரியைத் தற்போது திறந்துவிட வாய்ப்பில்லை!’ - பொதுப்பணித்துறை #LiveUpdates

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி ( File Photo )

17-11-2020 - தமிழ்நாடு மழை தொடர்பான முக்கிய நிகழ்வுகள், பதிவுகள்..!

17 Nov 2020 11 AM

`செம்பரம்பாக்கம் ஏரியைத் தற்போது திறந்துவிட வாய்ப்பில்லை!

`செம்பரம்பாக்கம் ஏரியைத் தற்போது திறக்கும் வாய்ப்பில்லை’ என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே பெய்துவரும் கனமழையால் 14 ஏரிகளும் நிரம்பி வழியும் நிலையில் இருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி
File Photo

இது குறித்துப் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், `` செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்திருக்கிறது. தற்போது ஏரியைத் திறந்துவிட வாய்ப்பில்லை. ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயர்ந்ததும், வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டு, பின்னர் நீர் திறந்துவிடப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.

17 Nov 2020 10 AM

நெல்லையில் நேற்று பெய்த மழையில் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர். இடம் குறுக்குதுறை,திருநெல்வேலி வீடியோ எல்.ராஜேந்திரன்

Posted by Vikatan EMagazine on Monday, November 16, 2020

உதவி எண்கள் அறிவிப்பு

சென்னையில் நேற்று காலை முதலே மழை பெய்துவருகிறது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி முடுக்கிவிட்டிருக்கிறது. மேலும், மீட்புப் பணிக்கென தீயணைப்புத்துறை தயார்நிலையில், வைக்கப்பட்டிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள 14 ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. சென்னையில் மழையால் ஏற்படும் சிரமங்களுக்கு மக்கள் 101 மற்றும் 94450 86080 என்ற எண்களில் அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 Nov 2020 10 AM

கடலோர மாவட்டங்களில் தாக்கம் அதிகம்!

கடலூர், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள குமந்தா மேடு தரைப்பாலம் கனமழையால் நிரம்பி வழிகிறது. வீடியோ: எஸ்.தேவராஜன்

Posted by Vikatan EMagazine on Monday, November 16, 2020

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்தார்.

சென்னை: கனமழை; வேகமாக நிரம்பிவரும் செம்பரம்பாக்கம்!  - அப்டேட் நிலவரம்; தூத்துக்குடிக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சென்னையில் பெய்துவரும் மழையால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. செங்கல்பட்டைச் சுற்றியிருக்கும் ஏரிகள் நிரம்பிய நிலையில், குடியிருப்புப் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.

ஆர்.பி.உதயக்குமார்
ஆர்.பி.உதயக்குமார்

இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு 40 சதவிகிதம் வரை குறைவாகப் பெய்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் கடலோர மாவட்டங்களில் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு