Published:Updated:

மக்கள் நீதி மய்யம்: தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையீடு! #NowAtVikatan

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

17-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

17 Dec 2020 1 PM

முல்லைப்பெரியாறு அணை போலீஸாருக்கு கொரோனா!

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை ஊழியர்கள், அதிகாரிகள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும், தமிழக பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம். கணேஷ்

17 Dec 2020 12 PM

தேர்தல் ஆணையத்தில் முறையீடு

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தேர்தல் பிரசாரங்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இந்த வாரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட டார்ச் லைட் சின்னம் இந்த முறையும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தாமதமாக கோரிக்கை வைத்ததாக எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு டார்ச் லை சின்னம் ஒதுக்கப்பட்டது. எனினும் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவ்ர் கமல்

இந்த நிலையில் பிரசாரத்தில் இருந்த கமல், சட்டப்போராட்டம் நடத்தியாவது சின்னத்தை மீட்போம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது, தமிழகத்திலும் தங்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். அக்கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு