Published:Updated:

மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உளளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

வெப்பச் சலனம் காரணமாக நேற்று மதியம் முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.‌ இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

##~~##
அதேபோல் இரவு நேரத்திலும் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்ததால், பேருந்துகள் கிடைக்காமல், பயணிகள் பேருந்து நிலையத்திலேயே வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.