Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 4,538 பேருக்குத் தொற்று

Corona (Representational Image)
Corona (Representational Image)

17.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Jul 2020 6 PM

தமிழகத்தில் 1.6 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,60,907-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,807 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 79 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,315 -ஆக அதிகரித்துள்ளது.

corona test
corona test

சென்னையில் மேலும் 1243 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,157 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது.

17 Jul 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 34,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு, 10,03,832 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 25,602 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,35,757 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,42,473 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு