Published:Updated:

இன்று அமித் ஷாவுடன் சந்திப்பு... நாளை பிரதமர் மோடி! - டெல்லியில் முதல்வர் பழனிசாமி #NowAtVikatan

டெல்லியில் முதல்வர் பழனிசாமி
டெல்லியில் முதல்வர் பழனிசாமி

18-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Jan 2021 3 PM

டெல்லியில் முதல்வர் பழனிசாமி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்க டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இன்று இரவு 7:30 மணிக்கு அமித் ஷாவைச் சந்திக்கும் முதல்வர், நாளை காலை 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியுடனான சந்திப்பில், சென்னை மெரினாவில் கட்டப்பட்டுவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்புவிழா, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா உள்ளிட்ட பல திட்டங்களின் தொடக்க விழாக்களுக்கு அழைப்பு விடுக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

18 Jan 2021 1 PM

புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடையில்லை!

அ.தி.மு.க
அ.தி.மு.க

அ.தி.மு.க-வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இன்று இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `வழக்கு தொடர மனுதாரருக்கு முகாந்திரமில்லை’ எனக் கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், `உட்கட்சித் தேர்தல் நடத்தும் வரை புதிய நிர்வாகிகளை நியமிக்கத் தடையில்லை’ என்று தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு