Published:Updated:

கொரோனா பாதிப்பு - நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை உரை #Corona #NowAtVikatan

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

18-3-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

18 Mar 2020 9 AM

அதிகரித்த கொரோனா பாதிப்பு!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த நிலையில், தற்போது இது 42 ஆக அதிகரித்துள்ளது. புனேவில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, பா.ஜ.க எம்.பி சுரேஷ் பாபு வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளார். சவூதி அரேபியா சென்றுவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஏற்கெனவே மத்திய இணை அமைச்சர் முரளிதரன் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

18 Mar 2020 10 AM

147 பேர் பாதிப்பு...!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 147 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 122 பேரும் வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41 பேரும் கேரளாவில் 24 பேரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 Mar 2020 12 PM

குணமடைந்தவருக்கு திரும்பவும் கொரோனா!

கொரோனா உறுதி செய்யப்பட்டு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன காஞ்சிபுரம் என்ஜினீயர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதல் நபராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சில நாட்களிலேயே சிகிச்சையில் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் வரை அழைத்து வந்து மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அரசு சார்பிலோ, அமைச்சர் சார்பிலோ இதை யாரும் உறுதிப்படுத்தப்படவில்லை.

18 Mar 2020 5 PM

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

டெல்லியிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த நபரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

18 Mar 2020 10 PM

கொரோனா பாதிப்பு!

உலகளவில் கொரோனா பாதிப்பும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும் அதனை எதிர்கொள்வது குறித்தும் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதனை பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு