Published:Updated:

தமிழகத்தில் மேலும் 536 பேருக்குத் தொற்று; சென்னையில் 7,000-ஐ கடந்த பாதிப்பு! -அமைச்சர் விஜயபாஸ்கர் #Corona #NowAtVikatan

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

18.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

18 May 2020 7 AM

உலக அளவில் 48 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

அமெரிக்காவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,27,664ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90,978ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.01 லட்சமாக அதிகரித்துள்ளது; வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,58,047ஆக உயர்ந்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,16,651ஆக உயர்ந்துள்ளது.

18 May 2020 9 AM

தீவிரப் புயலாக மாறியது 'Amphan'!

தெற்கு வங்கக்கடலில் அதிஉச்ச தீவிரப் புயலாக மாறியது 'Amphan'. சென்னைக்குக் கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் வடகிழக்கு திசை நோக்கி நகரும்; மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

18 May 2020 10 AM

மது விற்பனை 2 மணிநேரம் நீட்டிப்பு!

காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை தற்போது இரவு 7 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

18 May 2020 2 PM

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு!

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா. அதன்படி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்; மாவட்டத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பொதுபோக்குவரத்து சேவை இயங்கும் என்றும், அதேபோல் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதி அளித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

18 May 2020 4 PM

ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் கடைகள் திறக்க அனுமதி!

ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `பெருநகர சென்னைக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19-05-2020 முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி திறக்கப்படும் முடி திருத்தும் நிலையங்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளோடு இயங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

18 May 2020 6 PM

கொரோனா: தமிழக அப்டேட்!

தமிழகத்தில் புதிதாக 536 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். அதிகபட்சமாக சென்னையில் 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக இருக்கிறது. சென்னையில் மட்டும் பாதிப்பு 7,000-ஐ கடந்திருக்கிறது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

மேலும் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் மரணங்களின் விகிதம் என்பது குறைவாகத்தான் இருக்கிறது என்றார். அதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் என்பது 0.68 சதவிகிதமாக இருக்கிறது. கொரோனா காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கி 81 ஆக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு