Published:Updated:

தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்: `யாரைப் பாதுகாக்க வேளாண் சட்டம்?’ - ஸ்டாலின் #NowAtVikatan

தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

18-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Dec 2020 9 AM

தேச விரோதிகள் என முத்திரை குத்துகிறது!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க தோழமைக் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போராட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``விவசாயிகள் நலன் பற்றிச் சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. சுகாதாரநிலை பற்றி ஆராய்ந்து பார்க்காமல் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு விரோதமான சட்டங்களை நிறைவேற்றிவருகின்றன. கார்ப்பரேட் கம்பெனிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. யாரைப் பாதுகாக்க வேளாண் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்? போராட்டம் நடத்துபவர்களை தேச விரோதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது” என குற்றம்சாட்டினார். மேலும், `வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்’ என அறிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு