Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 1,65,714 பேருக்கு தொற்று! - புதிதாக 4,807 பேர் பாதிப்பு

கொரோனா 360
கொரோனா 360

18.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Jul 2020 6 PM

தமிழக கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்று மட்டும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,049 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,13,856 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 88 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2403-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

சென்னையில் மேலும் 1,219 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1219பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,596 ஆக அதிகரித்துள்ளது.

18 Jul 2020 6 PM

தி.மு.க எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

18 Jul 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்:

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொத்த பாதிப்பு, 10,38,716 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கொரோனா தொற்று நோய்
கொரோனா தொற்று நோய்
Pixabay

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,53,751 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,58,692 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு