Published:Updated:

காவிரியில் கட்டவிருக்கும் அணையை தடுக்கக்கோரி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

காவிரியில் கட்டவிருக்கும் அணையை தடுக்கக்கோரி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி
காவிரியில் கட்டவிருக்கும் அணையை தடுக்கக்கோரி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

காவிரியில் கட்டவிருக்கும் அணையை தடுக்கக்கோரி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

காவிரியில் கட்டவிருக்கும் அணையை தடுக்கக்கோரி தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

சென்னை: காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் கட்டப்படும் அணைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தஞ்சையில் வரும் 19ஆம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''மத்திய அரசுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் இரண்டு முக்கிய வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறோம்.

முதலாவது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வந்து விட்ட நிலையில், 6 ஆண்டுகளாகியும்கூட அது மத்திய அரசின் ‘கெசட்டில்’ பதிவு செய்யப்படாமலேயே இருந்து வந்தது. மத்திய அரசு அதற்குச் சொன்ன விளக்கங்கள் மக்களுக்கோ காவிரி டெல்டா விவசாயிகளுக்கோ ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று, அவர்களும் பல முறை இடித்த பிறகே, கடைசி நாளுக்கு முன்னாள் இந்தப் பதிவு (மத்திய கெசட்டில்) வெளியிடப்பட்டது.

அதன்படி, காவிரி நதி நீர்ப்பங்கீடு மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீடு குறித்த அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்பு குழு ஆகிய இரு அமைப்புகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. அவ்விரு குழுக்களும் நியமிக்கப்பட்டால் நடுவர் மன்றத் தீர்ப்பு என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு போன்ற சட்ட வலிமையுடன் கூடிய ஒன்று. அதைக் கால தாமதம் செய்யாமல் உடனே நியமிக்க வேண்டும். ஏதோ இவ்வாண்டு பருவ மழை பெய்து மேட்டூர் அணை நிரம்பியது. வடிகால் போல், கர்நாடகத்திற்குத் தண்ணீர் ஏராளம் வந்த காரணத்தால் வேறு வழி இன்றி திறந்துவிட்டனர். அதனால் செய்ய வேண்டிய நிரந்தரப் பாதுகாப்புக்கான இரு அமைப்புகளையும் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. இதை தமிழக அனைத்து கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே குரலில் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

இதைவிட மிகப் பெரிய அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி கர்நாடக அரசு, புதிதாக நீர் விசை மின் திட்டத்திற்காக 3 அணைகள் கட்டி, கர்நாடக நீர் மழை பெய்தாலும் தமிழ்நாட்டிற்கு எளிதில் வர இயலாத நிலையை உருவாக்கித் தடுப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யத் துவங்கி விட்டதாக, அமைச்சர்கள் மூலம் அறிவிப்புகள் வருகின்றன.

இந்த ஏற்பாடுகளுக்கு முன் அனுமதி மத்திய அரசிடமிருந்து பெறப்படவில்லை. ஏற்கெனவே வந்த இறுதித் தீர்ப்பின்படி, மேல் பகுதி நிலப்பரப்பின் நீர்வரத்தைத் தடுக்கும் உரிமை கர்நாடக அரசுக்குக் கிடையாது. கீழே பாயும் உபரி நீரை தேக்கி தடுப்பது சட்ட விரோதம். ஹேமாவதி கால்வாய்களை நவீனப்படுத்துதல், அரகாவதி நதியைச் சீரமைத்து, புனரமைத்தல், தொடர்பாக கர்நாடக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஏடுகளில் விளம்பரம் செய்துள்ளது. இதனை மத்திய அரசு தலையிட்டு, உடனே தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும்.

இரண்டாவது, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் மேல் பட்டப்படிப்பில் இடஒதுக்கீடு கூடாது என்று டெல்லி ‘எய்ம்ஸ்’ மாணவர் சேர்க்கை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பின் தீய விளைவுகளிலிருந்து சமூக நீதியைக் காப்பாற்றி ஒடுக்கப்பட்டோர் கல்வி உரிமையைப் பாதுகாக்க முன் வருவோம் என்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் மத்திய அரசு அதன் அமைச்சர்கள் மூலம் அறிவித்துள்ளது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், வடபுலத்துத் தலைவர்கள் முலாயம்சிங், சரத்யாதவ் போன்றவர்களும், ஏனைய சமூக நீதி அமைப்புகளும் ஓங்கிக் குரல் கொடுத்து வற்புறுத்தியுள்ளன.

##~~##
உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு கேட்போம். கிடைக்கவில்லையெனில் அரசின் சட்டத்திருத்தம் கொண்டு வந்து பாதுகாப்போம் என்று மத்திய அரசு கூறுகிறது. மறு ஆய்வு என்ற முறை இதுவரை வெற்றிகரமான பலனைத் தந்ததே இல்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பாளர்கள் எவரும் மறு ஆய்வில் மாற்றிச் சொன்னதாக வரலாறே இல்லை. எனவே, நேரடியாகவே அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட முன்வர வேண்டும். இல்லையானால் நமது ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உரிமையைக் காப்பாற்ற முடியாது.
இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி, காவிரி டெல்டா பகுதியின் முக்கிய நகரமான தஞ்சையில் வருகின்ற 19ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரைக்கு