Published:Updated:

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலி #Indian2 #NowAtvikatan

இந்தியன் - 2 விபத்து
இந்தியன் - 2 விபத்து

19.2.2020 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Feb 2020 9 PM

2,000-ஐ தாண்டிய பலி எண்ணிகை!

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது உலக நாடுகளைக் கவலைகொள்ளச் செய்துள்ளது. தற்போது வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,004 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 74,185 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் சிக்கியுள்ள சில இந்தியர்களை மீட்க இன்று மேலும் ஒரு விமானம் செல்கிறது. முன்னதாக இரண்டு விமானங்கள் மூலம் சுமார் 600-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு இந்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தங்களின் வீடுகளுக்கு அனுப்பவுள்ளனர்.

20 Feb 2020 9 PM

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி!

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலி #Indian2 #NowAtvikatan

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்று தொடங்குகிறது. இதைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். கீழடி உள்ளிட்ட 4 ஊர்களில் அகழாய்வுப் பணிகள் செயல்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

20 Feb 2020 9 PM

சென்னையில் குவிந்த இஸ்லாமியர்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் இஸ்லாமிய அமைப்பினர் தலைமையில் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இருந்து பேரணியாகச் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிடும் பேரணி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

20 Feb 2020 9 PM

என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்?

தமிழகம் முழுவதும் சி.ஏ.ஏ-க்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் போராட்டங்களைக் கண்காணிக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தி.மு.க எம்.பி கனிமொழி தனது முகநூலில், "மாநிலம் முழுவதும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க தமிழக டி.ஜி.பி 6 அதிகாரிகளை நியமித்துள்ளார். மகேந்திரன் என்பவர் தூத்துக்குடிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவரது மேற்பார்வையில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் மூலம் இந்த அரசாங்கம் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்த விரும்புகிறது?" எனப் பதிவிட்டுள்ளார்.

20 Feb 2020 9 PM

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வருவதையொட்டி, பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

20 Feb 2020 9 PM

`கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள்!' -

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலி #Indian2 #NowAtvikatan

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி துவங்க உள்ள இடத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர். கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமான தொடர்ச்சியை 6-ம் கட்ட அகழாய்வில் அறிய திட்டமிடப்பட்டுள்ளது.

20 Feb 2020 9 PM
20 Feb 2020 9 PM

இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து

இந்தியன் - 2 விபத்து
இந்தியன் - 2 விபத்து

பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலி. 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிரேனின் மேல் கட்டப்பட்டிருந்த அதிக எடை கொண்ட ராட்சத லைட் எதிர்பாராத விதமாக சரிந்த விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு