Published:Updated:

`ஜூன் 1 முதல் 200 ஏசியில்லாத ரயில்கள் இயக்கம்!’ - ரயில்வே அமைச்சகம் முடிவு #NowAtVikatan

ரயில்கள்
ரயில்கள் ( வி.ஸ்ரீனிவாசுலு )

19.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

19 May 2020 10 AM

இந்தியாவில் 1 லட்சத்தை கடந்தது பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824 லிருந்து 39,174 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,029 லிருந்து 3,163 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 35,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8,437ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,249ஆக அதிகரித்துள்ளது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.40 லட்சமாக அதிகரித்துள்ளது; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,07,371ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,20,130ஆக அதிகரித்துள்ளது.

19 May 2020 10 AM

குறைந்த டாஸ்மாக் விற்பனை!

தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் வருவாய் குறைந்துள்ளது. ரூ.163 கோடியிலிருந்து ரூ.133 கோடியாக குறைந்த டாஸ்மாக் வருவாய் மேலும் குறைந்து ரூ.109 கோடியானது.

திங்கள்கிழமை விற்பனை நிலவரம்:

மதுரை மண்டலம் - ரூ. 28.6 கோடி

திருச்சி மண்டலம் - ரூ. 27.4 கோடி

சேலம் மண்டலம் - ரூ. 24.3 கோடி

கோவை மண்டலம் - ரூ. 22.5 கோடி

சென்னை மண்டலம் - ரூ. 6.5 கோடி

19 May 2020 11 AM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்!

கொரோனா ஊரடங்கால் ஜூன் 1-ம் தேதி நடைபெறவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் செங்கோட்டையன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

19 May 2020 6 PM

அ.தி.மு.க-வில் ஊராட்சி கழகச் செயலாளர் பொறுப்பு ரத்து

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.கவில் அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. ஊராட்சிக் கழகச் செயலாளர்களுக்கு விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

19 May 2020 7 PM

தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்

தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 552 ஆக உள்ளது. எனவே, சென்னையில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,672 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா - கொரோனா
இந்தியா - கொரோனா

வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உள்ளது.

19 May 2020 9 PM

ஜூன் 1 முதல் 200 ஏசியில்லாத ரயில்கள் இயக்கம்!

ரயில்கள்
ரயில்கள்

ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏசியில்லாத 200 ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரயில்களுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். அந்த ரயில்கள் அனைத்து ஏ.சி வசதியில்லாத 2ம் வகுப்புப் பெட்டிகளைக் கொண்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு