Published:Updated:

பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு - அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! #NowAtVikatan

பேரறிவாளன்
பேரறிவாளன்

19-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 May 2021 8 PM

பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாய் திருமதி அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். அதைக் கனிவுடன் கருத்தில் கொண்டு, விதிகளைத் தளர்த்தி 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு செய்தி வெளியீடு
அரசு செய்தி வெளியீடு
19 May 2021 12 PM

மறைந்த எழுத்தாளர் கி.ரா-வுக்கு சொந்த ஊரில் அரசு மரியாதை!

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு சார்பில் இறுதி மரியாதை நடைபெற்றுவருகிறது.

19 May 2021 11 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் கட்சியிலிருந்து விலகல்!

 முருகானந்தம்
முருகானந்தம்

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன், சுற்றுசூழல் அணியின் பத்மப்ரியா, பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் தங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கிக்கொண்ட நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலகுவதாக பொதுச்செயலாளர் முருகானந்தம் திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

19 May 2021 10 AM

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு!

சேகர்பாபு
சேகர்பாபு

அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் நிலங்கள், கட்டடங்களின் விவரங்கள், கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழா போன்ற தகவல்களை மக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவு. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகளோடு நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு அமைச்சர் இந்த உத்தரவை வெளியிட்டார்.

19 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,67,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,54,96,330 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,529. இந்தியாவில் இது ஒரு நாள் மரணங்களில் இதுவரை இல்லாத உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,83,248-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,19,86,363-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 32,26,719 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,89,851 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,58,09,302 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

19 May 2021 9 AM

விஜயகாந்த்: `வழக்கமான பரிசோதனை!’

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை குறித்து கட்சி விளக்கம் அளித்துள்ளது.

பேரறிவாளனுக்கு 30 நாள் விடுப்பு - அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு! #NowAtVikatan

அதில், ``விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. வழக்கமான பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி!
19 May 2021 8 AM

`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்!’

சட்டப்பேரவைத் தேர்தலின்போது `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெற்ற, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் தனித்துறை ஒன்றை உருவாக்கி, மக்களின் குறைகள் 100 நாள்களில் தீர்க்கப்படும் என அறிவித்தார்.

ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், ``‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ், பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களில் 70,000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்!” எனப் பதிவிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு