Published:Updated:

India -China FaceOff: கர்னல் சந்தோஷ்பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதி; அரசு வேலை! தெலங்கானா அரசு #NowAtVikatan

கர்னல் சந்தோஷ் பாபு
கர்னல் சந்தோஷ் பாபு ( Twitter )

19.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Jun 2020 8 PM

கர்னல் சந்தோஷ்பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதி

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்க தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தோஷ் பாபு குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வீடு வழங்கவும் அவரது மனைவிக்கு குரூப்-1 அரசுப் பணி வழங்கப்படும் எனவும் தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்னல் சந்தோஷ் பாபு
கர்னல் சந்தோஷ் பாபு

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன வீரர்கள் இடையே கடந்த 15ம் தேதி நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 வீரர்கள் வரை இறந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், சீனா தரப்பில் அதிகாரபூர்வ தகவல் அளிக்கப்படவில்லை.

19 Jun 2020 7 PM

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு!

எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதல் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% ஒதுக்கீடு வழங்க முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தகவல். இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தகவல்.

19 Jun 2020 7 PM

மூன்றாவது நாளாக 2,000-த்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 -ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,322 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.

Corona Treatment
Corona Treatment
pixabay.com

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 அதிகரித்த நிலையில், இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 666-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

`250 பெண்களுக்கு 1 குளியலறை!'
நந்தம்பாக்கம் கொரோனா முகாமிலிருந்து கண்ணீர்க் குரல்
19 Jun 2020 4 PM

அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள்..!

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் கடிதம் எழுதியுள்ளார்.

19 Jun 2020 3 PM

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு செயற்கை சுவாசம்!

India -China FaceOff: கர்னல் சந்தோஷ்பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதி; அரசு வேலை! தெலங்கானா அரசு  #NowAtVikatan

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

19 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 13,586 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,532 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,711 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் 1,63,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

19 Jun 2020 9 AM

ஊரடங்கு - காவல்துறை தீவிர கண்காணிப்பு!

சென்னையிலிருந்து வெளியே செல்லும் வாகனங்களையும் சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களையும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் மக்கள் வெளியே வராமல் இருக்க அந்தந்தத் தெருக்களை முழுமையாகத் தடுப்பு ஏற்படுத்தி மூடியுள்ளனர்

19 Jun 2020 8 AM

மீண்டும் ஊரடங்கு: வெறிச்சோடிய சென்னை சாலைகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 12 நாள்கள் கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த முறை ஊரடங்கு மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை ...

Posted by Vikatan EMagazine on Thursday, June 18, 2020

இதைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. கடந்த சில நாள்களாகப் பரபரப்பாகக் காணப்பட்ட சென்னையின் முக்கிய சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன. முக்கிய சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த சில நாள்களாகச் சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். இதனால் கடந்த சில நாள்களாகவே கடுமையான போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி இன்று காலை முதல் வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு