Published:Updated:

Tamil News Today: தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை?! - முதல்வர் ஆலோசனை

ஸ்டாலின்
ஸ்டாலின்

19-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Jun 2021 11 AM

தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவை!

ஸ்டாலின்
ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இந்தநிலையில், வரும் வாரத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் 21-ம் தேதியுடன் ஊரடங்கும் முடியும் நிலையில், அதைக் கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் கருத்தை முதல்வர் கேட்டுவருகிறார். கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவிருக்கிறது.

19 Jun 2021 11 AM

வருமான வரி செலுத்தாதது கண்டுபிடிப்பு!

மதன்
மதன்

யூடியூபில் ஆபாசமாகப் பேசி, கோடிக்கணக்கில் சம்பாதித்த `பப்ஜி’ மதன், மனைவி கிருத்திகா பெயரில் வங்கியில் 4 கோடி ரூபாய் பணம் வைத்துள்ள நிலையில், முறையாக வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது! இதற்கிடையே மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாராவது இருந்தால், உடனடியாகப் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

19 Jun 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 60,753 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,98,23,546 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,647. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,85,137-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா முன்களப் பணியாளர்கள்
கொரோனா முன்களப் பணியாளர்கள்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,86,78,390 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 7,60,019 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 97,743 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 27,23,88,783 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு