Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 1.7 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 4,979 பேருக்குத் தொற்று

corona
corona ( Unsplash )

19.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 4,979 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,059 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,915 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 78 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2,481-ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 1,254 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,254 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,859 ஆக அதிகரித்துள்ளது.

19 Jul 2020 2 PM

வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று!

வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்
வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன்

முன்னதாக, கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவன், திட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கணேசன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- லோகேஸ்வரன்.கோ

19 Jul 2020 11 AM

வெறிச்சோடிய தாம்பரம் சாலைகள்!

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலாகியிருக்கும் நிலையில், போக்குவரத்தின்றி வெறிச்சோடிய தாம்பரம் சாலைகள். படங்கள்: தே.அசோக்குமார்
19 Jul 2020 11 AM
கொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்!

கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா!

கிருஷ்ணகிரி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல்நலக் கோளாறால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்குட்டுவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்குட்டுவன்
செங்குட்டுவன்

அவருக்கு ஏற்கெனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தநிலையில், தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 14வது சட்டமன்ற உறுப்பினர் இவராவார்.

19 Jul 2020 10 AM

தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்!

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த முடக்கமும் இன்றி தூய்மை சேவையாற்றி வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள். இடம்: ஊட்டி, படங்கள்: கே.அருண்

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகியிருக்கிறது. மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவைகளுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடின.

19 Jul 2020 10 AM

இந்தியாவில் 11 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,77,618 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 38,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Corona virus
Corona virus
Unsplash

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 671 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,816 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,77,423 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா: `Double-blind' முறையில் மனிதப் பரிசோதனை! - முக்கிய கட்டத்தில் கோவாக்ஸின்
19 Jul 2020 10 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,25,865 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 86,12,192 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,04,917 ஆக உயர்ந்துள்ளது.

corona spread
corona spread

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 38,33,271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 1,42,877 ஆக அதிகரித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு