Published:Updated:

’`நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ - `800’ படம் குறித்து விஜய் சேதுபதி #NowAtVikatan

விஜய் சேதுபதி- முத்தையா முரளிதரன்
விஜய் சேதுபதி- முத்தையா முரளிதரன்

19-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Oct 2020 6 PM

இனி பேசுவதற்கு எதுவுமில்லை!

இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இன்று முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அவர் தனது ட்விட்டரில், ``என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவது நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

முரளிதரன்
முரளிதரன்
விஜய் சேதுபதி

முரளிதரனின் இந்த ட்வீட்-க்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி ``நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டார். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்து விட்டதாக தகவல் வெளியானது. இத்யனிடையே சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அவரிடாஅறுதல் தெரிவித்து புறப்பட்டார். முதல்வர் வீட்டு வாசலில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ``நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் பொருள்” என்றவர், ``800 திரைப்படம் குறித்து இனி பேசுவதற்கு எதுவுமில்லை” என்றார்.

`800 திரைப்படத்திலிருந்து விலகிவிடுங்கள்’  முரளிதரன்... `நன்றி வணக்கம்’ விஜய் சேதுபதி!
19 Oct 2020 2 PM

லடாக் எல்லைப் பகுதியில் சிக்கிய சீன வீரர்!

லடாக் எல்லை
லடாக் எல்லை
AP

லடாக்கின் சுமர்-டெம்சோக் (Chumar-Demchok) பகுதியில் பாதுகாப்பு படையினரால் சீன ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்திய பாதுகாப்பு படையினரின் ரோந்து பணியின் போது, அவர் சிக்கினார். கவனக்குறைவால் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்கலாம், என தகவல்கள் வெளியாகி உள்ளன. உரிய நடைமுறைகளுக்குப் பின்னர் அவர் சீன இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

19 Oct 2020 10 AM

முதல்வருக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த வாரம் காலமானார். இந்தநிலையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் வீட்டில் நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். முதல்வர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார் ஸ்டாலின். துரைமுருகன், பொன்முடி ஆகியோர் ஸ்டாலினுடன் முதல்வர் வீட்டுக்கு வந்திருந்தார். ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வர் வீட்டில் இருந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு