Published:Updated:

பீகார் மாநிலக் கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா! - ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே புதிய குழப்பம் #NowAtVikatan

கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சர்

19-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Nov 2020 4 PM

புதிய உள் இட ஒதுக்கீடு!

அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

`கொரோனா தடுப்பின் முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் மத்தியத் தொகுப்பிலிருந்து உள் ஒதுக்கீடு செய்யப்படும்’ என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.

19 Nov 2020 3 PM

திடீர் ராஜினாமா... புதிய குழப்பம்!

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அண்மையில் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் வென்றிருந்தபோதும், தேர்தலுக்கு முன்னர் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பொறுப்பெற்றார். பீகாரில் ஆட்சி அமைந்து ஒரு சில நாள்களே ஆன நிலையில் பீகார் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்ற மேவாலால் செளத்ரி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார், இதனால் பீகார் அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

19 Nov 2020 10 AM

4 மாணவர்களுக்கு கொரோனா!

மாணவர்களுக்குப் பரிசோதனை
மாணவர்களுக்குப் பரிசோதனை
ஸ்ரீனிவாசலு

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக கலந்தாய்வில் கலந்துகொள்ள வந்திருந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டத்தில் நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு