Published:Updated:

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட் #NowAtVikatan

19.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்
19 Dec 2019 10 PM

ரஜினிகாந்த் ட்வீட் 

குடியுரிமை சட்ட திருத்ததுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர், `எந்த பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது; நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

19 Dec 2019 9 PM

இந்த ஆட்டம் போதுமா? - ஐபிஎல் ஏலமும் ஹெட்மயரின் நடனமும்!

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயரை ரூ.7.75 கோடிக்கு டெல்லி அணி தன் வசப்படுத்தியது. இதுதொடர்பாக டெல்லி அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ஹெட்மயர் டெல்லி ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினோம் ஒரு நிமிடம் கழித்து இந்த வீடியோவை அனுப்பினார்” எனப் பதிவிட்டுள்ளனர். ஹெட்மயர் உற்சாகமாக நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

19 Dec 2019 8 PM

வினய் சாய் கிஷோரை டிக் செய்த சிஎஸ்கே

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan

தமிழக வீரரான வினய் சாய் கிஷோரை அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. தமிழக அணியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்திருக்கும் வினய் இந்தாண்டு சையது முஷ்தாக் அலி தொடரின் டாப் விக்கெட் டேக்கர்.

19 Dec 2019 6 PM

ஹாசில்வுட்டை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஹாசில்வுட்
ஹாசில்வுட்

ஆஸ்திரேலியா வீரரான ஜோஷ் ஹாசில்வுட்டுக்கு ஆரம்ப விலையாக ரூ.2 கோடிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஹாசில்வுட்டை ஏலத்தில் எடுக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சென்னை அணி ஹாசில்வுட்டை ஏலத்தில் எடுத்தது.

19 Dec 2019 6 PM

ஷிம்ரன் ஹெட்மயரை தூக்கிய டெல்லி

ஹெட்மயர்
ஹெட்மயர்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரன் ஹெட்மயருக்கு ஆரம்ப விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹெட்மயர் மிரட்டியிருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. கொல்கத்தா பாதியில் விலகியது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ஹெட்மயரை ரூ 7.75 கோடிக்கு டெல்லி அணி தன் வசப்படுத்தியது.

19 Dec 2019 5 PM

வாழ்த்துகள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்!, 50 ஓவர் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியவர் இந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரர். இந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக கவனம் பெற்றார். 20 லட்சத்தில் தொடக்கிய ஏலம் 2.4 கோடி ரூபாயில் முடிந்தது. இந்த இளம் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்தமாக்கியது.

`பானிபூரி விற்பனை; கட்டாய சமையல் வேலை!' - சாதித்த 17 வயது `இரட்டை சத' நாயகன்
19 Dec 2019 5 PM

கோடீஸ்`வருண்’!

ஆல் ரவுண்டரான வருண் சக்கரவர்த்திக்கு இந்த ஐபிஎல் ஏலத்தில் செம ரெஸ்பான்ஸ். அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டியது. 30 லட்சம் ரூபாயில் தொடங்கிய ஏலம் 4 கோடி ரூபாயில் முடிவுக்கு வந்தது. அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.

19 Dec 2019 5 PM

ஏலத்தில் கவனம் ஈர்த்த விராட் சிங்!

ராஜஸ்தான் அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய த்ரிபாதி இந்த முறை கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் 60 லட்சம் ருபாய்க்கு ஏலம் போனார். இளம் வீரர் விராட் சிங் 1.90 கோடிக்கு ஏலம் போனார். அவரை ஹைதரபாத் அணி ஏலத்தில் எடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

19 Dec 2019 5 PM

மீண்டும் சென்னை!

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ருபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது!

19 Dec 2019 5 PM

சல்யூட் காட்ரெல்!

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan

மேற்கிந்திய அணியின் காட்ரெல் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் போனார். அவர் பஞ்சாப் அணிக்கு 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

19 Dec 2019 5 PM

நாதன் குல்டர் நைல் விலையை ஏற்றிய சென்னை!

ஐ.பி.எல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த முறை செம கிராக்கி இருந்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் நாதன் குல்டர் நைல் -க்கு சென்னை மற்றும் மும்பை அணிகள் போட்டி போட்டது. சென்னை அணியிடம் 9 கோடி மட்டுமே மீதம் இருந்த நிலையில் தொடர்ந்து அவரை எடுக்க முனைப்பு காட்டியது சென்னை. இதனால் அவருக்கானதொகை உயர்ந்தது. இறுதியில் அவர் 8 கோடி ருபாய்க்கு மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

19 Dec 2019 5 PM

ராஜஸ்தானில் உனத்கட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனத்கட் -ஐ 3 கோடி ருபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐ.பி.எல் ஏலங்களில் உனத்கட்-க்கு இருந்த கிராக்கி இந்த முறை குறைந்திருந்ததை காண முடிந்தது!

19 Dec 2019 5 PM

சிறுஇடைவேளைக்குப் பின் தொடங்கிய ஐ.பி எல் ஏலத்தில் அலெக்ஸ் கேரி, டெல்லி அணிக்கு 2.4 கோடி ருபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். க்ளாசன், ரஹிம், நமன் ஓஜா, ஹோப், மோகித் ஷர்மா ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இலங்கையின் குஷல் பெராராவும் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை!

19 Dec 2019 4 PM

பெங்களூருவில் மோரிஸ்!

சென்னை அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான கிறிஸ் மோரிஸ்க்கு இந்த முறை செம கிராக்கி இருந்தது. இறுதியில் மோரிஸ் பெங்களூரு அணிக்கு 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.

19 Dec 2019 4 PM

களத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan
CSK

ஐ.பி.எல் ஏலத்தில் தற்போது சென்னை அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் குர்ரானை 5.50 கோடி ருபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

19 Dec 2019 4 PM

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு செம மவுஸ்!

ஐ.பி.எல் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் 4.4 கோடிக்கு பெங்களூரு அணிக்கும், மேக்ஸ்வெல் 10.75 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும் ஏலம் போன நிலையில் தற்போது கம்மின்ஸ்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கம்மின்ஸ் யாரும் எதிர்பார்க்காத 15.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டார்.

19 Dec 2019 4 PM

கிராக்கி குறையாத மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மேக்ஸ்வெலுக்கு இந்த வருடமும் கிராக்கி குறையவில்லை. அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் கடுமையாக முயற்சித்தன. அவரது அடிப்படை விலையான 2 கோடியில் தொடங்கிய ஏலம் இறுதியில் ரூபாய் 10.75 கோடிக்கு ஏலம் போனார். பஞ்சாப் அணியால் மேக்ஸ்வெல் வாங்கப்பட்டார்.

19 Dec 2019 3 PM

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜேசன் ராய், டெல்லி அணிக்கு 1.50 கோடி ருபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்திய அணியின் ஹனும விகாரி. புஜாரா ஆகியோரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. ராபின் உத்தப்பா ராஜஸ்தான் அணிக்கு 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

19 Dec 2019 3 PM

மோர்கனுக்கு கிராக்கி!

மார்கன்
மார்கன்
AP

கொல்கத்தாவில் தற்போது ஐ.பி.எல் ஏலம் நடைபெற்று வருகிறது. முதல் ஆளாக கிறிஸ் லின் 2 கோடி ருபாய்க்கு மும்பைக்கு அணிக்கு ஏலம் போனார். அடுத்து ஏலத்தில் வந்த இங்கிலாந்து அணியின் மார்கனுக்கு அதிக கிராக்கி இருந்தது. இறுதியில் அவர் ருபாய் 5.25 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலம் போனார்.

19 Dec 2019 3 PM

ஐ.பி.எல் ஏலம் அப்டேட்ஸ்!

`பிரச்னைக்கு தீர்வு காண வன்முறை வழி ஆகி விடக் கூடாது!’ - ரஜினிகாந்த் ட்வீட்  #NowAtVikatan
Twitter/IPL

2020 -ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 338 வீரர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 8 அணிகளில் 78 இடங்கள் இந்த ஏலம் மூலம் நிரப்பபடவுள்ளது. இந்திய அணியின் உத்தப்பா, ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கம்மின்ஸ், இங்கிலாந்து அணியின் ராய், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்டெல் ஆகிய வீரர்களுக்கு இந்த ஏலத்தில் அதிக கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

19 Dec 2019 1 PM

பொங்கல் பரிசு வழங்கத் தடை!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கத் தடை இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

19 Dec 2019 1 PM

`அறிவாலயம் போகலாமா?' என்பேன்; ஏக்கமாகப் பார்ப்பார்!

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 98வது பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அன்பழகன், வீட்டில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

அன்பழகனுடன் ஸ்டாலின்
அன்பழகனுடன் ஸ்டாலின்

அன்பழகன் குறித்து ஸ்டாலின், ``அறிவாலயம் போகலாமா?” என நான் அவரிடம் கேட்கும்போது, அவர் கண்களில் ஆர்வம் மின்னிடும். ஆனால், உடல் தளர்வாக இருக்கும். அதைச் சுட்டிக்காட்டி, ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்படுகிறது. என்னைத் தொட்டு, வாழ்த்திடுவார்; பழைய நினைவுகளில் மூழ்கிடுவார். அரிய புகைப்படங்களை அவரிடம் காட்டும்போது எத்தகைய லட்சியப் பாதையை, நெருப்பாற்றை நீந்தி இந்த இயக்கம் வந்திருக்கிறது, வளர்ந்திருக்கிறது என்பதை அவர் உணர்வு வெளிப்படுத்தும். தலைவர் கலைஞர் அவர்களின் பழைய உரைகளின் தொகுப்புகளைக் கேட்டாலும், தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் பேராசிரியர் அவர்களின் விழிகளில் நீர் துளிர்க்கிறது. கொள்கை வழித் தோழமையுணர்வுடன் அண்ணன் - தம்பிகளாகப் பழகிய பாசம், பாசத்தின் துடிப்பு எத்தனை ஆண்டுகளாயினும் விட்டுப்போகுமோ!'' என்று நெகிழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.

19 Dec 2019 2 PM

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்த்து தெரிவித்து மதுரை கே.கே நகரில் உள்ள வக்பு வாரியக்கல்லூரி 300 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

19 Dec 2019 1 PM

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியப் பிரபலங்கள்!

இந்தியாவில் உள்ள பிரபலங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் 13ம் இடம் பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் தோனி 5வது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் விராட் கோலியும், இரண்டாமிடத்தில் அக் ஷய் குமாரும், மூன்றாம் இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். தமிழ் நடிகர்கள் விஜய் 47வது இடத்திலும், அஜித் 52வது இடத்திலும் உள்ளனர்.

19 Dec 2019 2 PM

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்த்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் நடத்தி வரும் போராட்டம்..

19 Dec 2019 12 PM

டெல்லியில் செல்போன் சேவைகள் நிறுத்தம்!

குடியுரிமை சட்டத் திருத்தப் போராட்டம் டெல்லியில் நடந்து வரும் நிலையில் டெல்லியின் சில பகுதிகளில் செல்போன் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரசின் உத்தரவை ஏற்று செல்போன் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்களும் தங்களின் சேவைகளை டெல்லியில் சில பகுதிகளில் நிறுத்தியுள்ளனர். போன், எஸ்.எம்.எஸ் மற்றும் நெட் என எந்த சேவையும் அங்கு வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜாவை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

19 Dec 2019 12 PM

ரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் நகைப் பறிப்பு!

தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த டிக்கெட் பரிசோதகர் ரெஜினியிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோடம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத நபர் 4 சவரன் நகையைப் பறித்தது தெரியவந்தது.

19 Dec 2019 11 AM

தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு சோதனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து. தலைமைச் செயலகத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

19 Dec 2019 11 AM

பா.ம.க ஆதரிக்க என்ன காரணம்?

ஊழல் வழக்கிலிருந்து அன்புமணியைக் காப்பாற்றவே குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு பா.ம.க ஆதரவாக வாக்களித்ததாக தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர், ``மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஒரேநேரத்தில் இரட்டைத் துரோகம் செய்கிறது. அண்டை நாட்டவர் வரலாம் என்றால், இஸ்லாமியரைத் தடை செய்வது ஏன்? என்பதும், அண்டை நாடுகளின் பட்டியலில் இலங்கையைச் சேர்க்காதது ஏன்? என்பதும்தான் தி.மு.க தலைவர் எழுப்பிய கேள்விகள்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நாங்கள் இந்தக் கேள்வியைத்தான் எழுப்பினோம். இரண்டு அவைகளிலும் எதிர்த்து வாக்களித்தோம். மக்களவையில் பா.ஜ.க.,வுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் வென்றது அந்தச் சட்டம். மாநிலங்களவையில் வெற்றி பெற்றதற்குக் காரணம், அ.தி.மு.க. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணமானது. இந்தத் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும், டாக்டர்.ராமதாஸும், அன்புமணி ராமதாஸும்தான் காரணம். நாடு இன்று பற்றி எரிய இவர்களே காரணம்!

ராமதாஸ்-அன்புமணி
ராமதாஸ்-அன்புமணி

தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்தார்கள் என்றால், பா.ம.க ஆதரிக்க என்ன காரணம்? ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணியைக் காப்பாற்றுவதற்காக சிறுபான்மையினர், ஈழத்தமிழர் உரிமையைக் காவு கொடுத்துள்ளார் ராமதாஸ். சி.பி.ஐ விசாரித்து வரும் வழக்கை மெளனிக்க வைக்க மெளனமாகி விட்டார்கள், இரண்டு மருத்துவர்களும்!'' என்று விமர்சித்திருக்கிறார்.

19 Dec 2019 10 AM

ஸ்ரீகைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சி நடத்திய போராட்டத்தில் பேசிய சீமான், ``எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. கைலாசா என ஒரு நாடு உருவாகிவிட்டது. குடியுரிமையற்றவர்களாக எங்களை மாற்றினாலும் பிரச்னை இல்லை. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். `கைலாசா’ன்னு ஒரு நாட்டை அவர் உருவாக்கிவிட்டார். அங்கே போய் இருப்போம்” என்றார் சிரித்தபடியே.

ட்வீட்
ட்வீட்

சீமானின் இந்தக் கருத்துக்கு @SriKailashPmo என்ற ட்விட்டர் ஐடியில் பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவில், ``ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!!!.- பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ்'' என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேநேரம், இந்த ட்விட்டர் ஐடியின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.

19 Dec 2019 8 AM

பெங்களுரூவில் 144 தடை உத்தரவு! #CAA

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு போராட்டம்
பெங்களூரு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி தென் மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் வரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் இன்று காலை 6 முதல் டிசம்பர் 21ம் தேதி நள்ளிரவு வரை 3 நாள்கள் 144 தடை உத்தரவு போடப்படிருக்கிறது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக வியாழக்கிழமை போராட்டங்கள் நடத்த 80-க்கும் மேற்பட்ட அமைப்புகள் அனுமதிகோரியிருந்த நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

19 Dec 2019 8 AM

ஐபிஎல் ஏலம்!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், 186 இந்திய வீரர்கள் மற்றும் 146 வெளிநாட்டு வீரர்கள் என 332 வீரர்கள் ஏலம் விடப்பட இருக்கிறார்கள்.

ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் ஏலம்
IPL

இருப்பினும் எட்டு அணிகளால் மொத்தமாகவே 73 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்கப்படும். அதில், 29 வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுத்துக்கொள்ளலாம். வழக்கமான பெங்களூருவில் நடைபெறும் ஏலம் முதல்முறையாக இந்த ஆண்டு கொல்கத்தாவில் நடக்கிறது.