Published:Updated:

`ரோஹித், கோலி கிளாஸ்!' - மூன்றாவது முறையாகத் தொடரும் முதல் போட்டி சென்டிமென்ட் #INDvAUS #NowAtVikatan

ரோஹித் ஷர்மா - விராட் கோலி
ரோஹித் ஷர்மா - விராட் கோலி ( BCCI )

19.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

19 Jan 2020 9 PM

மூன்றாவது முறையாகத் தொடரும் முதல் போட்டி சென்டிமென்ட் #INDvAUS

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஆஸ்திரேலியா நிர்ணயித்த 287 ரன்கள் இலக்கை இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 119 ரன்களும் கேப்டன் விராட் கோலி 89 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஏகர், ஜாம்பா மற்றும் ஹஸல்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ரோஹித் ஷர்மா - விராட் கோலி
ரோஹித் ஷர்மா - விராட் கோலி
BCCI

இந்தத் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றிருக்கிறது. அதேபோல், கடந்த 2019ல் இரண்டு முறை இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் ஒருநாள் தொடரில் மோதியபோது முதல் போட்டியில் தோற்ற அணியே தொடரையும் வென்றிருக்கின்றன. 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதேபோல், அதே ஆண்டில் இவ்விரு அணிகள் இடையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட மற்றொரு தொடரின் முதல் போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணி, தொடரை 3-2 என்று கைப்பற்றி இருந்தது.

19 Jan 2020 7 PM

கேப்டனாக புதிய சாதனை படைத்த கோலி! #INDvAUS

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக மிகவிரைவாக 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார்.

கோலி
கோலி
BCCI

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார். 82 இன்னிங்ஸ்களில் சாதனை படைத்த அவர், 127 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களைக் கடந்திருந்த தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். இந்தப் பட்டியலில் 131 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 3வது இடத்தில் இருக்கிறார். 4வது இடத்தில் 135 இன்னிங்ஸ்களோடு தென்னாப்பிரிக்காவின் ஸ்மித்தும், 5வது இடத்தில் 136 இன்னிங்ஸ்களோடு இந்தியாவின் சவுரவ் கங்குலியும் இருக்கின்றனர்.

19 Jan 2020 5 PM

வாட்ஸ்அப்பில் சிக்கல்! - பயனாளர்கள் அவதி

வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பயனாளர்கள் ட்விட்டரில் புகார் தெரிவிக்கின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ்கள் மட்டுமே அனுப்ப முடிவதாகவும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்ப முடியவில்லை எனக் கூறுகின்றனர். உலகின் பல்வேறு இடங்களில் இதே நிலைதான் நீடித்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு குறித்து இதுவரை வாட்ஸ் அப் நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை. #Whatsppdown என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

19 Jan 2020 5 PM

இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு!

இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் ஸ்மித் - மார்னஸ் லாபுஷேன் ஒருவரும் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினர். மார்னஸ் அரைசதம் அடித்த நிலையில் வெளியேறினார்.

ஸ்மித்
ஸ்மித்

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினர். ஒருநாள் போட்டியில் ஸ்மித்தின் 9-வது சதமாக இது பதிவானது. ஸ்மித் 131 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், சைனி தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

19 Jan 2020 4 PM

ஸ்மித் அபார சதம்!..

ஸ்மித்
ஸ்மித்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் ஏமாற்றம் அளித்தனர். பொறுப்பை உணர்ந்த ஸ்மித் - மார்னஸ் லாபுஷேன் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியின் ரன் கணக்கை உயர்த்தினர். அரைசதம் அடித்த நிலையில் மார்னஸ் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜடேஜா பந்துவீச்சில் கோலியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய மிச்செல் ஸ்ட்ராக் ஜடேஜாவின் அதே ஓவரில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி - ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டியில் ஸ்மித்தின் 9-வது சதமாக இது பதிவானது.

19 Jan 2020 1 PM

ஆஸ்திரேலியா பேட்டிங்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஹேசெல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாங்கள் சேஸிங்கை விரும்பினோம். இது ட்ரை பிட்ச் என்பதால் பிந்தைய பாதியில் பனியை எதிர்பார்க்கிறோம். நாங்கள் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்து மொத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சரியான இடைவெளியில் போதுமான முன்னேற்றங்களைப் பெற வேண்டும். போன போட்டியில் கே.எல் ராகுல் இன்னிங்ஸை மாற்றியமைத்தார். அவர் இன்று ஹோம் கிரவுண்டில் விளையாடுவதால் அவரிடம் இருந்து நாங்கள் அதேபோன்ற பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

19 Jan 2020 11 AM

சீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை

புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, "சீனாவில் கொரனோ வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் உரிய மருத்துவ பரிசோதனை செய்வதற்கு சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்ற மாநிலங்களை விட இது போன்ற வைரஸ் பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் முன்னெச்சரிக்கையாக திகழ்கிறது.

ஏற்கனவே நிபா வைரஸின் தாக்கம் மற்ற மாநிலங்களில் இருந்த போதிலும் தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. அதேபோல கொரனோ வைரஸின் பாதிப்பு தமிழகத்தில் இருக்காது. தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட தடுப்பு மற்றும் கூட்டு முயற்சியால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது" என்றார்.

19 Jan 2020 9 AM

சபரிமலையில் ஓ.பி.எஸ்!

சபரிமலையில் ஓ.பி.எஸ்
சபரிமலையில் ஓ.பி.எஸ்
twitter

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் சபரிமலைக்குச் சென்றுள்ளார். இருமுடி கட்டி நேற்று மாலை தேனியில் இருந்து சபரிமலைக்குச் சென்றுள்ளார். அவருடன் ஆதரவாளர்கள் சிலர் சென்றிருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் யாரும் செல்லவில்லை. இன்று அதிகாலை அவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார். மாலை அவர் மீண்டும் தேனி திரும்புவார் என்று கூறப்படுகிறது.

19 Jan 2020 8 AM

போலியோ முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சோட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 43,051 மையங்களில் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி.

19 Jan 2020 9 AM

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் பிரமாண்ட பொங்கல் கொண்டாட்டம்!

வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்கம் MTS வழங்கும் 2020-ம் ஆண்டு பிரமாண்ட பொங்கல் விழா இன்று நடைபெற்றது. ஏராளமான அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து டல்லாஸ் நகரின் மைதானத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடியுள்ளனர். பிரமாண்டமாக நடந்த இந்த விழாவில் கும்மியாட்டம், கபடி என பொங்கல் நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளன .

அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் பொங்கல் கும்மியாட்டம்

Posted by Vikatan EMagazine on Saturday, January 18, 2020
பின் செல்ல