Published:Updated:

சென்னை மெரினா காந்திசிலை முன்பு பா.ஜ.க போராட்டம்! #NowAtVikatan

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம் ( கே.ஜெரோம் )

01.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

01 Jan 2020 2 PM

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிபின் ராவத்!

முப்படை தளபதியாக அறிவிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். விழாவில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ்குமார் சிங் பதூரியா மற்றும் கடற்படை தளபதி கரம்பீர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், ``முப்படைகளையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட வைப்பதே இலக்கு. பாதுகாப்பு படையினர் அரசியலில் இருந்து விலகியே இருப்போம். ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே பின்பற்றுவோம் என தெரிவித்தார்" என்றார்.

01 Jan 2020 9 AM

புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்களே!

சென்னை மெரினா காந்திசிலை முன்பு பா.ஜ.க போராட்டம்! #NowAtVikatan

மகிழ்ச்சியின் ஆரம்பமாய்.. வெற்றியின் தொடக்கமாய்.. மாற்றங்களின் படியாய் அனைவருக்கும் அமையட்டும் இந்த வருடம். அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் மக்களே.

01 Jan 2020 9 AM

சென்னையில் மழை!

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவு முழுவதும் களைக்கட்டிய நிலையில் இன்று காலை சென்னையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு எனச் சென்னையின் பல இடங்களில் காலையிலிருந்து விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது.

01 Jan 2020 10 AM

2 இந்திய ராணுவ வீரர்கள் மரணம்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சண்டையில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுத்தபோது வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

01 Jan 2020 2 PM

மானியமில்லாத சிலிண்டர் விலை உயர்வு!

தொடர்ந்து 5வது மாதமாக மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.19 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ரூ.714க்கு விற்பனை செய்யப்பட்ட மானியம் இல்லாத சிலிண்டர் விலை தற்போது ரூ.734 ஆக உயர்ந்துள்ளது.

01 Jan 2020 4 PM

பா.ஜ.க போராட்டம்!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய நெல்லை கண்ணனை உடனடியாகக் கைது செய்யக்கோரி சென்னையில் பா.ஜ.கவின் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்
கே.ஜெரோம்

மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதில், பா.ஜ.கவின் இல. கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு