Published:Updated:

கும்பகோணம்: கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2 மருத்துவர்கள் உயிரிழப்பு!

டாக்டர் சித்தார்த்தன்
டாக்டர் சித்தார்த்தன்

கும்பகோணத்தில் ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வரும் 31-ம் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
`கர்ப்பிணி பெண் காவலர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் சிறப்பு விடுப்பு!' - விழுப்புரம் எஸ்.பி

பொதுமக்கள் மட்டுமன்றி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதும் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளான கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர்
Pixabay

கும்பகோணம், சாந்தி நகரில் தனியார் சர்க்கரைநோய் சிகிச்சைக்கான மருத்துவமனையை நடத்திவந்தவர் மருத்துவர் சித்தார்த்தன் (52). இவருக்குக் கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

திடீரென சீல் வைக்கப்பட்ட மருத்துவர் புகழேந்தியின் கிளினிக்; இதுதான் காரணமா?

இதையடுத்து சித்தார்த்தனுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை கொடுக்கப்பட்டுவந்த நிலையில் சித்தார்த்தன் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட இரங்கல் செய்தியில், `கும்பகோணத்தில் சிறப்பாக மருத்துவப் பணியாற்றிய சித்தார்த்தன் மறைவு என்பது அவருடைய குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, அவரோடு மருத்துவப் பணியாற்றும் சக மருத்துவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனவே அவருடைய குடும்பத்தினருக்கும், மருத்துவ நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என அதில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா தொற்றுக்கு பலியான டாக்டர்
கொரோனா தொற்றுக்கு பலியான டாக்டர்

அதேபோல், கும்பகோணம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் அஜீம் (75). காது, மூக்கு, தொண்டை மருத்துவரான இவர் ஆயிகுளம் எதிரே தனியாக கிளினிக் நடத்திவந்தார். இந்தநிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் சிகிச்சை பலனின்றி டாக்டர் அப்துல் அஜீம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி கும்பகோணத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்தது கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு