Published:Updated:

இரண்டரை வயதில் அபார நினைவாற்றல்; சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி!

சாதனை குழந்தை தேயன்ஸ்ரீ

தனது அபாரமான நினைவாற்றல் மற்றும் செய்முறைகள் மூலம் உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி தேயன்ஸ்ரீ.

இரண்டரை வயதில் அபார நினைவாற்றல்; சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுமி!

தனது அபாரமான நினைவாற்றல் மற்றும் செய்முறைகள் மூலம் உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்து அசத்தியிருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமி தேயன்ஸ்ரீ.

Published:Updated:
சாதனை குழந்தை தேயன்ஸ்ரீ

பிறந்த குழந்தைகளின் கைகளில் விளையாட்டுப் பொருள்களுக்குப் பதிலாக ஆண்ட்ராய்டு செல்போன்களை திணித்து மகிழும் பெற்றோர்களுக்கு மத்தியில், வண்ணங்கள், வடிவங்கள், தேசிய தலைவர்களின் பெயர்கள் உள்ளிட்ட பொது அறிவுத் தகவல்களையும், அது தொடர்பான எளிய செயல்முறைகளையும் கற்றுக்கொடுத்து தங்கள் குழந்தையை சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைத்திருக்கிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த பாலாஜி - பவித்ரா தம்பதி. தந்தை பாலாஜி விவசாயம் செய்துவரும் நிலையில், குழந்தை தேயன்ஸ்ரீயை வளர்க்கும் முழு பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் எம்.பி.ஏ பட்டதாரியான தாய் பவித்ரா.

தேயன்ஸ்ரீ
தேயன்ஸ்ரீ

ஏழு மாதங்களுக்கு முன்பு தனது இரண்டாவது வயதில், `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த குழந்தை தேயன்ஸ்ரீ தற்போது `ஏசியன் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். அ முதல் ஃ வரையுள்ள உயிர் எழுத்துகளை வார்த்தைகளுடன் 22 விநாடிகளிலும், ஆங்கிலத்தில் A to Z வரை வார்த்தைகளுடன் 50 விநாடிகளிலும் என 15 பிரிவுகளின் கீழ் தேர்வுக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடைகளை அளித்து சாதனையாளராகியிருக்கிறார் தேயன்ஸ்ரீ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூரிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்றபோது, ``வணக்கம்... வாங்க...” என்று மழலை மொழியில் வரவேற்றார் தேயன்ஸ்ரீ. உள்ளே சென்றதும் மேசையின் மேலிருந்த தேசத் தலைவர்களின் சிறிய படங்களைப் பார்த்து `இவர்களெல்லாம் யார் என்று தெரியுமா?’ என்று நாம் கேட்க `தெரியும்’ என்று தலையாட்டுகிறார். தொடர்ந்து சந்திரசேகர ஆசாத், பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி என நாம் ஒவ்வொரு பெயராகச் சொல்ல, அனைவரது படங்களையும் சரியாக நம்மிடம் எடுத்துக் கொடுக்கிறார். குழந்தையின் தாய் பவித்ராவிடம் பேசினோம். ``எங்க அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். ரொம்ப கஷ்டப்பட்டு என்னை எம்.பி.ஏ படிக்க வச்சாங்க. ஆனா, படிப்பு முடிஞ்சதும் எனக்கு உடனே கல்யாணம், குழந்தைனு ஆயிட்டதால வேலைக்கெல்லாம் போக முடியல.

பெற்றோர்களுடன் குழந்தை தேயன்ஸ்ரீ
பெற்றோர்களுடன் குழந்தை தேயன்ஸ்ரீ

அதனால அந்தப் படிப்பை, என் பாப்பாவ நல்லபடியா வளர்க்கறதுக்காகப் பயன்படுத்திக்க முடிவெடுத்தேன். குழந்தையை சாதிக்க வைக்க, ஒரு அம்மாவா என்னவெல்லாம் பண்ண முடியும்னு ஆன்லைன்ல பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். சாதிக்கணும்ங்கறதைத் தாண்டி, டி.வி இல்லாம நம்மள சுத்தி இருக்கற எல்லா நல்லா விஷயங்களையும் பாப்பா தெரிஞ்சுக்கணும்னு நெனச்சேன். நம்மூர்ல இப்போ சி.பி.எஸ்.இ, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் போன்ற சில சிலபஸ்கள் மட்டும்தான் இருக்கு. ஆனா, வெளிநாடுகள்ல யேர்லி, ரைட் ப்ரைன்னு நிறைய எஜுகேஷன் முறை வந்துடுச்சு. இந்த கோர்ஸ்லாம் நாம முடிக்கலாம். அதுபோல ஆன்லைன்ல நெறைய சின்னச் சின்ன கோர்ஸ்கள் இருக்கு. அதை அட்டெண்ட் பண்ணிக்கூட குழந்தைங்களுக்கு நாம கத்துக்குடுக்கலாம். ஆனா, அதுக்கெல்லாம் நிறைய பணம் செலவாகும்ங்கிறதால அதையெல்லாம் நான் செய்யல. ஆன்லைன்ல இலவசமாவே நிறைய தகவல்கள் கொட்டிக் கிடக்குது. அதையெல்லாம் வெச்சு எங்க பாப்பாவுக்கு எப்படியெல்லாம் டிரெய்னிங் குடுக்கலாம்னு யோசிச்சேன்.

குழந்தைங்களுக்கு மூணு மாசம் ஆகும்போதே கலர்ஸ் தெரிய ஆரம்பிச்சிடும். அதனால, என் பொண்ணுக்குப் புத்தகங்களை படங்களா காட்ட ஆரம்பிச்சேன். 8 மாசம் ஆகறப்போ அவங்களுக்கு சாப்பிட ஃப்ரூட்ஸ் குடுத்தா, அது புத்தகத்துல எங்க இருக்குதுனு தேட ஆரம்பிச்சாங்க. அப்போதான் அவங்களுக்கு நல்ல மெமரி பவர் இருக்குதுனு தெரிஞ்சிக்கிட்டேன். வெளில கடைகளுக்கு கூட்டிக்கிட்டு போயிட்டு, 10 மாசத்துக்கப்புறம் திரும்பவும் அதே இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனா அது எந்த இடம், அந்த இடத்துல என்னென்ன இருக்கும்னு பாப்பா கரெக்டா சொல்லிடுவாங்க. அதேபோல அவங்களுக்கு ஒரு வயசு இருக்கும்போது தேசிய தலைவர்களின் படங்களை மேட்ச் பண்ண குடுத்தோம். முதல் தடவையே 20 தலைவர்களை சரியா மேட்ச் பண்ணாங்க.

சிறுமி தேயன்ஸ்ரீ
சிறுமி தேயன்ஸ்ரீ

குழந்தைங்க விஷயத்துல இதைத்தான் ஃபாலோ பண்ணணும்னு இல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் நிச்சயமா ஒரு தனித்திறமை இருக்கும். நம்ம குழந்தைகளுக்கு ஸ்டோரீஸ், ஆக்டிங், ரைம்ஸ் எதுல ஆர்வம் இருக்குதுனு தெரிஞ்சிக்கிட்டு அதுல அவங்களை ஊக்குவிக்கணும். வெறுமனே டி.வி பார்க்கவும், விளையாட விடுறதுக்கும் பதிலா அறிவை வளர்க்கும் விளையாட்டுகளை கற்றுக் கொடுக்கலாம்.

`ஸ்கூலுக்கு போனா குழந்தையே கத்துக்கப் போகுது... ஏன் வீட்டிலேயே அவங்கள ஃபோர்ஸ் பண்றீங்க'னு சிலரோட கருத்துகள் இருக்கு. இது படிப்பு தொடர்பான விஷயம் மட்டும் கிடையாது. அவர்களை பன்முகத் திறமை வாய்ந்தவங்களா இப்பவே வளர்க்க ஆரம்பிச்சோம்னா வாழ்நாள் முழுக்க அதை அவங்க ஃபாலோ பண்ணுவாங்க. அதை ஃபோர்ஸ் பண்ணணும்னு அவசியம் இல்ல. அன்பா சொன்னாலே புரிஞ்சுக்குவாங்க. எங்க பாப்பா அவங்களாவே சாப்பிடுவாங்க. சாப்பிட்டதும் அந்த பிளேட்டை எடுத்துட்டுப் போயி அவங்களே சிங்க்ல போடுவாங்க. காலைல எழுந்ததும், நைட் படுக்கறதுக்கு முன்னாடியும் அவங்களே பிரஷ் பண்ணிடுவாங்க.

அதேபோல குழந்தைங்கள இயற்கையோட வளர விடணும். அது அவங்களுக்கு நிறைய விஷயங்களைக் கத்துக் குடுக்கும். எங்க வீட்டுல சின்னதா ஒரு மாடித்தோட்டம் வச்சிருக்கோம். அங்க இருக்கற செடிகளுக்கு பாப்பா தினமும் தண்ணி ஊத்துவாங்க. எங்ககூட சேர்ந்து செடி வைக்க மண்ணு பிசைவாங்க. இதனால அவங்களுக்கு பொறுமை இருக்கும். செடிகளைப் பராமரிப்பதைப் போலவே சக மனிதர்களையும் கையாளும் பக்குவம் அவங்களுக்கு வந்துடும். அதேபோல ஒரேநாள்ல குழந்தைங்க எல்லாத்தையும் பண்ணிடுவாங்கனு எதிர்பார்க்கக் கூடாது.

நீங்க சொல்றதுக்கு அவங்க பதில் பேசலைன்னாலும், அவங்க தெரிஞ்சுக்கணும்னு நினைக்கற விஷயங்களை சொல்லிக்கிட்டே இருங்க. அவங்க அதைக் கவனிக்காதது போலதான் இருக்கும். ஆனா, கவனிச்சிக்கிட்டுத்தான் இருப்பாங்க. கண்டிப்பா அதுக்கு என்னைக்காவது ஒருநாள் பதில் பேசுவாங்க. இப்போ நிறைய பேரு பண்முகத் திறமையோட அவங்க குழந்தைங்களை வளர்க்கறதுக்கு ஐடியா கேக்குறாங்க. அவங்களுக்காகவே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன்” என்கிறார் பெருமிதம் பொங்க.