Election bannerElection banner
Published:Updated:

`லேசான அறிகுறி; கொரோனா பாசிட்டிவ்!’ - ட்விட்டரில் ராகுல் காந்தி தகவல் #NowAtVikatan

ராகுல் காந்தி
ராகுல் காந்தி ( Twitter )

20-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

20 Apr 2021 3 PM

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி!

ராகுல் காந்தி ட்வீட்
ராகுல் காந்தி ட்வீட்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

20 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில் இன்று பாதிப்பு சற்றுக் குறைவாக பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. நேற்று இந்த பாதிப்பு 2,73,810-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,53,21,089 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,761. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,80,530-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,31,08,582-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 20,31,977 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு