Published:Updated:

மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 83 பேர்! தமிழகத்தில் 13,000-த்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை #Corona #NowAtVikatan

கொரோனா
கொரோனா

20.5.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

20 May 2020 9 AM

50 லட்சத்தைத் தொட்ட பாதிப்பு!

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,70,583ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 19,56,361ஆக அதிகரித்துள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,24,535ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163லிருந்து 3,303ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20 May 2020 10 AM

நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி!

பதிவு பெறாத நெசவாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட கைத்தறி, துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். நிதியுதவிக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி, துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

20 May 2020 7 PM

தமிழகத்தில் 13,000-த்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை #Corona

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால், தமிழகத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 557 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சென்னையில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய 83 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், இன்று மட்டும் சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 987 ஆக உள்ளது. மேலும், 3 பேர் இன்று இந்த வைரஸூக்கு பலியாகியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,882 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு